ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் இன்று சென்னை வருகை

big_360812_1427079220

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் என மொத்தம் 15 பேர் மீன்பிடி தொழிலுக்காக பஹ்ரைன் நாட்டுக்குச் சென்றனர்.

கடந்த 2016, அக்டோபர் 20-ம் தேதி மீன்பிடித்துவிட்டு 22-ம் தேதி மீனை விற்பதற்காக துபாய் செல்லும் வழியில் ஈரான் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது உடமைகளும் பறிக்கப்பட்டன.

அவர்களுடைய முதலாளி நீதிமன்ற உத்தரவின்படி ரூ.9 லட்சம் அபராதம் செலுத்திய பிறகும் அவர்களின் பாஸ்போர்ட் பறிக்கப்பட்டு படகிலேயே 5 மாதங்கள் சிறை வைக் கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு கோரியதன் அடிப்படையில் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம் மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியது.

அதன் பேரில், மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையின் காரணமாக ஈரான் கடற்படையினர் சிறைபிடித்து வைத்திருந்த தமிழக மீனவர்கள் 15 பேர் கடந்த 2-ம் தேதி பஹ்ரைன் நாட்டுக்கு அனுப்பப் பட்டனர். அவர்கள் தாயகம் திரும்ப தேவையான உதவிகளை பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் செய்தது.

இதையடுத்து அவர்கள் இன்று (ஏப்ரல் 6) சென்னை வருகின்றனர். வேலையிழந்து தவிக்கும் அவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>