இழப்பீடு வழங்குவது மட்டுமே விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகி விடாது : உச்சநீதிமன்றம்

supreme_court_scba

டெல்லி: விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது, இழப்பீடு வழங்குவது மட்டுமே விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாகி விடாது என கூறியுள்ள உச்சநீதிமன்றம், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நிரந்தர கொள்கைகளை வகுக்க மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.

இந்த கொள்கையை வரும் 3 வாரத்திற்குள் வகுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலை பின்னணியை மத்திய அரசு அறியாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தலைமை நீதிபதி கே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. குஜராத்தை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த இந்த மனு மீது பதிலளிக்க, மத்திய அரசுக்கு 3 வாரம் அவகாசம் அளித்து வழக்கு மார்ச் 27-க்கு ஒத்திவைத்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>