இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதிகளில் ஒரு குடம் குடிநீர் ரூ.10க்கு விற்பனை

குடிநீர் பஞ்சம் தலைதூக்கியுள்ளதை அறிந்த சில தனியார் நிறுவனங்கள், இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், விசவனூர் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு குடம் குடிநீரை ரூ.10 முதல் ரூ.15வரை கூவி கூவி விற்பனை செய்கின்றனர்.

குடிநீர் பஞ்சம் தலைதூக்கியுள்ளதை அறிந்த சில தனியார் நிறுவனங்கள், இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், விசவனூர் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு குடம் குடிநீரை ரூ.10 முதல் ரூ.15வரை கூவி கூவி விற்பனை செய்கின்றனர்.

இளையான்குடி : இளையான்குடி, சாலைக்கிராமம் பகுதியில் ஒரு குடம் குடிநீர் ரூ.10க்கு, கூவி கூவி வண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் தலைதூக்கியுள்ள தண்ணீர் பஞ்சத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வருடங்களாக பருவமழை பொய்த்துப் போனது. இதனால் கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள் அனைத்தும் வறண்ட நிலையில் உள்ளன. இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. இதனால் பல கிராமங்களில் குடிநீருக்காக, நீர்நிலை ஓரங்களில் அமைக்கப்பட்ட கிணறுகள், போர்வெல்கள் (ஆழ்துளை கிணறு) பாழடைந்து கிடக்கின்றன.

இது ஒருபுறமிருக்க அரசு திட்டங்களில் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்ட குடிநீர் போர்வெல்கள் குறைந்த ஆழத்தில் அமைத்து மோசடி செய்ததில், அரசு பணம் பல லட்சம் வீணடிக்கப்பட்டதுடன், தண்ணீர் சப்ளை இல்லாமல் வெறும் காட்சிப்பொருளாக அவை உள்ளன சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தாகம் தீர்க்க வேண்டி கிராமங்கள் தோறும் திமுக ஆட்சியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காக, அதிமுக அரசு இத்திட்டத்திற்கு போதிய நிதியை ஒதுக்காததால், இக்குழாய்கள் ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு, உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனால் பல இடங்களில் தண்ணீர் வீணாக, கருவேலங்காட்டிற்கும், சாலையோரங்களிலும் வீணாகியது. அதனால் கிராமங்களில் தண்ணீர் பற்றாகுறை நாளுக்குநாள் அதிகமாகியுள்ளது. குடிநீர் பஞ்சம் தலைதூக்கியுள்ளதை அறிந்த சில தனியார் நிறுவனங்கள், இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், விசவனூர் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு குடம் குடிநீரை ரூ.10 முதல் ரூ.15வரை கூவி கூவி விற்பனை செய்கின்றனர்.

இலவசங்கள் என்ற பெயரில் விளம்பரம் செய்து கொள்ளும் அதிமுக அரசு, ஜீவாதாரமான குடிநீரை வழங்குவதிலும், நீர் நிலைகளைப் பாதுகாப்பதிலும் அலட்சியம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இளையான்குடி ஒன்றியத்தில் தலைதூக்கியுள்ள குடிநீர் பஞ்சத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் பிரபாகரன் கூறுகையில், “அரசு திட்டங்களை சரியாக செய்தாலே தண்ணீர் பற்றாகுறை வராது. ஆனால் பெயரளவில் செயல்படும் திட்டங்களால், அரசு பணம் வீணடிப்பதுடன், தண்ணீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, கிராமங்களில் சிலர் குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். குடிநீர் கிடைக்காத காரணத்தால், ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களும் வேறுவழியின்றி வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இளையான்குடி ஒன்றியத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைப் போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>