இலவச வேட்டி சேலை டெண்டர் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

large_madras-high-court-ll-size-min-26540

சென்னை: அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலை உற்பத்திற்கான நூல் கொள்முதல் செய்வதற்கான ரூ.450 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2018ம் ஆண்டு பொங்கலையொட்டி வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகளை தயாரிப்பதற்கான நூலைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை சீருடைகள் துறை இணை இயக்குநர் கடந்த ஜூன் 22ம் தேதி வெளியிட்டார்.இந்நிலையில், இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சோழபுரத்தைச் சேர்ந்த வெங்கட்ராம் ஸ்பின்னிங் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதில், டெண்டர் அறிவிப்பில் பல குளறுபடிகள் உள்ளன. அதனால் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:தமிழகத்தில் இலவச வேட்டி, சேலைகளை வழங்கும் திட்டத்தின்கீழ் வரும் 2018ம் ஆண்டிற்கான பாலியஸ்டர் சேலை மற்றும் பாலியஸ்டர் வேட்டிகள் நெய்வதற்கான நூல் கொள்முதல் குறித்து ரூ.450 கோடி மதிப்பிலான டெண்டர் கடந்த ஜூன் 22ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை சமர்பிக்கும் இறுதி தேதி 2017 ஜூலை 7ம் தேதி என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக டெண்டர் விளம்பரம் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல் மாநில டெண்டர் புல்லட்டினிலும் வெளியிடப்பட வேண்டும். ரூ. 50 கோடிக்கும் அதிகமான கொள்முதல் டெண்டர் என்றால் தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்டத்தின்கீழ் டெண்டர் அறிவிப்புகள் இந்தியன் டிரேட் ஜர்னல் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்பட வேண்டும். விதிமுறைகளின்படி ரூ. 2 கோடிக்கும் அதிகமான டெண்டராக இருந்தால் டெண்டர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் தரப்பட வேண்டும். அந்த கால அவகாசம் 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.அதே நேரத்தில், காலதாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காகத்தான் டெண்டர் விண்ணப்பத்திற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இலவச வேட்டி, சேலை வழங்குவதில் கால தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக இயந்திரத்தனமாக அரசு செயல்படக்கூடாது.

வெளிப்படையான டெண்டர் சட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும். ரூ 2 கோடிக்கும் அதிகமான டெண்டரை வெளியிடும்போது அதில் பங்கேற்பவர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் தரப்பட வேண்டும்.எனவே, இந்த விஷயத்தில் அரசுத் தரப்பில் கூறப்படும் விளக்கங்களை இந்த நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, கடந்த ஜூன் 22ம் தேதி வெளியிடப்பட்ட இலவச வேட்டி, சேலைக்கான நூல் கொள்முதல் டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. மேலும் வெளிப்படை தன்மையுடன் இதே டெண்டரை மீண்டும் வெளியிட வேண்டும் இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>