இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கொடுப்பணவு கிடைக்காததால் ஏமாற்றம்

_91182340_salary

இலங்கையில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்த இடைக்கால கொடுப்பணவு ரூபாய் 2,500 இம்மாத சம்பளத்தில் வழங்கப்படவில்லை.
கொடுப்பணவு

வங்கிக் கடன் பெற்று கொடுப்பணவு வழங்குவது சாத்தியமற்றது என தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன
கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இக்கொடுப்பணவு, இம் மாத சம்பளத்திலும் சேர்த்து கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த தங்களுக்கு இதனால் ஏமாற்றமாகிவிட்டதாக தொழிலாளர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இக்கொடுப்பணவு வழங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்ட மூலமொன்றும் சில மாதங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டிருந்தது.
தேயிலைத் தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குகின்ற காரணத்தை முன் வைத்து தோட்ட நிர்வாகங்கள் அதனை வழங்க மறுத்திருந்தன.
இருந்தபோதிலும் நிதி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வங்கிக் கடன் மூலம் இரு மாதங்களுக்கு இக்கொடுப்பணவு வழங்கப்பட்டது.
அந்தக் கொடுப்பணவு கூட தங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. வேலைக்கு சமூகமளித்த நளொன்றுக்கு ரூபாய் 100 என கணக்கிடப்பட்டு தான் கிடைத்ததாக கூறும் தொழிலாளர்கள், நிரந்தர சம்பள உயர்வு கிடைக்கும் வரை இடைக்கால கொடுப்பணவு கிடைக்க வேண்டும என தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் எதிர்பார்ப்பதாக கூறுகின்றனர்.
ஆனால் தொடர்ந்தும் வங்கிக் கடன் பெற்று அக்கொடுப்பணவை வழங்குவது சாத்தியப்படாது என தோட்ட நிர்வாகங்கள் குறிப்பிடுகின்றன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிரந்தர சம்பள உயர்வு பிரச்சினை விவகாரத்தில் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையிலான ஒரு இணக்கப்பாடு காண முடியும் என்ற எதிர்பார்ப்புடனே இடைக் கால கொடுப்பணவு பற்றி அறிவிக்கப்பட்டதாக அரச தரப்பு கூறுகின்றது.
இது தொடர்பாக இறுதியாக நடைபெற்ற இரு தரப்பு பேச்சுக்களில் ஒரு முன்னேற்றத்தை காண முடிந்துள்ளதாக கூறுகின்றார் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ்.
”அடுத்த சில நாட்களில் நிரந்தர சம்பள உயர்வு பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும். தொழிலாளர்களுக்கு ஒரு நியாயமான சம்பள உயர்வை அதன் மூலம் பெற முடியும் ” என்றும் இது தொடர்பாக ” பிபிசி தமிழோசை “யுடன் பேசிய அவர் நம்பிக்கையும் வெளியிட்டார். .
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் இரு வருடங்களுக்கொரு தடவை கூட்டு ஒப்பந்த மொன்றின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றது.
தோட்ட நிர்வாகங்களும், தொழிற்சங்களும் இந்த ஓப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன.
இறுதியாக, 2013-ம் ஆண்டு மார்ச் 31-ல் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த போதிலும் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை.
இது தொடர்பாக தொழிற்சங்கங்களும் தோட்ட நிர்வாகங்களும் கடந்த 20 மாதங்களாக 8 தடவைகள் கூடி பேசினார்கள் . இதுவரை தீர்வு இல்லை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>