இலங்கை கடற்படையால் தொடரும் அட்டூழியம் : இந்திய மீனவர்கள் 10 பேர் சிறைபிடிப்பு

. கச்சத்தீவு அருகே பழுதாகி நின்ற ஜஸ்டின் என்பவரது படகில் இருந்த ராமேஸ்வர 10 மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடித்துள்ளனர்கச்சத்தீவு அருகே பழுதாகி நின்ற ஜஸ்டின் என்பவரது படகில் இருந்த ராமேஸ்வர 10 மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.
டெல்லியில் மீனவ பிரதிநிதிகள் இன்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க உள்ள நிலையில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை உலர்த்திக் கொள்ளவும் உள்ள உரிமையை தடுக்கும் வகையில், இலங்கை அரசு கடற்படையினர் மூலம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, மற்றும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தமிழக மீனவர்களை பாதுகாக்கவும், தாக்குதல் நடவடிக்கைகளை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த மார்ச் 6-ம் தேதி மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் இலங்கை கடற்படை மீண்டும் சிறைபிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>