இலங்கை ஏசிஎப் பணியாளர் படுகொலை வழக்கு: மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு

இலங்கையில், பிரெஞ்சு நாட்டு தொண்டு நிறுவனமான 'ஆக்ஷன் கோன்ட்ரே லா பெயிம்' (ஏசிஃஎப்) நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் 17 பேரின் படுகொலை நடந்து 10 வருடங்களாகியும், இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில், பிரெஞ்சு நாட்டு தொண்டு நிறுவனமான ‘ஆக்ஷன் கோன்ட்ரே லா பெயிம்’ (ஏசிஃஎப்) நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் 17 பேரின் படுகொலை நடந்து 10 வருடங்களாகியும், இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

இலங்கையில், பிரெஞ்சு நாட்டு தொண்டு நிறுவனமான ‘ஆக்ஷன் கோன்ட்ரே லா பெயிம்’ (ஏசிஃஎப்) நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் 17 பேரின் படுகொலை நடந்து 10 வருடங்களாகியும், இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

இப்படுகொலையுடன் தொடர்புடையவர்கள், இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியன்று, திருகோணமலை மாவட்டத்தில், முதூர் நகரிலுள்ள ‘ஏசிஃஎப்’ அலுவலகத்திற்குள் வைத்து 4 பெண்கள் உட்பட 17 பணியாளார்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில், 4 பெண்கள் உட்பட 16 பேர் தமிழர்கள்; ஒருவர் இஸ்லாமியர். இவர்கள் அனைவரும் அம்மாவட்டத்தை சேர்ந்த உள்ளுர் பணியாளர்கள்.
இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்றமிழைத்தவர்களின் பதவியைப் பாராது தீர்ப்பு கூற வேண்டும். யுத்த குற்றம் மற்றும் தொண்டர்களின் கொலை தொடர்பாக வெளிநாட்டு பங்களிப்புடன் கூடிய விசாரணை உரிய முறையில் நடைபெறுவதை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் ” என்று கேட்டுள்ளது.
“உள்ளுர் பணியாளர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்காதது போரின் போது நடைபெற்ற குற்றச் செயல்கள் தொடர்பான பொறுப்புக் கூறலை உதாசீனம் செய்ததற்கு முதல் சாட்சியாக இலங்கை உள்ளது ” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டம் மற்றும் கொள்கைப் பணிப்பாளரான ஜேம்ஸ் றொஸ் தெரிவித்தார்.
யுத்த குற்ற நீதிமன்றத்திற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு தேவைப்படுவது ஏன் என்பதை இப்படுகொலை தொடர்பாக நடந்த விசாரணை முறை எடுத்துக்காட்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>