இலங்கை அமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு படகுகளை விடுவிக்கும் திட்டம் எதுவும் இல்லை

Jakkamna

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களின் 143 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டன. ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் 45 படகுகள் சேதமடைந்துள்ளன. 18 படகுகள் பயனின்றி முழுவதும் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் தெரிவித்தார். இலங்கை கடற்படையால் கடந்த 3 மாதங்களில் கைதாகி சிறையில் உள்ள, 38 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வரும் மே மாதம் பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில், அதற்கு முன்பாக சிறையிலுள்ள மீனவர்களும், படகுகளும் விடுவிக்கப்படலாம் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே, கொழும்பில் இலங்கை கடல்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘இந்திய மீன்பிடி படகுகள் விடுவிக்கப்படும் எனக்கூறப்படும் செய்தியில் உண்மையில்லை. அப்படி எந்தத் திட்டமும் இல்லை. இதுதொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை’’ என்றார்.

இலங்கை அமைச்சரின் கருத்து தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் மீன்பிடி தடைகாலம் துவங்கவுள்ள நிலையில், படகுகளை மீட்டு தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>