இரோம் சர்மிளாவின் திருமணம் நடைபெற்றது:மு.திலிப்

irom sharmila_0

கொடைக்கானலில் மணிப்பூர் போராளி இரோம் சர்மிளாவின் திருமணம் இன்று நடைபெற்றது. இங்கிலாந்தை சேர்ந்த காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோவை மணம் புரிந்தார்.

மணிப்பூரை சேர்ந்த போராளி இரோம் சர்மிளா தனது காதலன் தேஸ்மந்த் கொட்டின்கோவுடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தங்கியுள்ளார். கடந்த ஜூலை 12 ஆம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்திற்கு விண்ணப்பித்திருந்தார். இன்று (ஆக.17ம் தேதி) இரோம் சர்மிளா, தேஸ்மந்த் கொட்டின்கோ திருமணம் கொடைக்கானல் சார் பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. தேஸ்மந்த் கொட்டின்கோ சர்மிளாவுக்கு மோதிரம் அணிவித்தார்.

கொடைக்கானலில் உள்ள ஆதிவாசிகளின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பேன் என தெரிவித்திருந்தார் இரோம் சர்மிளா. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த சிலர் இரோம் சர்மிளா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென கோரிக்கையும் வைத்தனர். பழனி மலை புலையன் மற்றும் பளியர் இன ஆதிவாசிகள் இரோம் சர்மிளாவின் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனுக்கள் வழங்கினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>