இராமநாதர மாவட்ட இளம் பெண் பட்டதாரி கின்னஸ் சாதனை

இராமநாதர மாவட்ட இளம் பெண் பட்டதாரி கின்னஸ் சாதனை

இராமநாதர மாவட்ட இளம் பெண் பட்டதாரி கின்னஸ் சாதனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் களஞ்சியம் நகரை சேர்ந்தவர் பட்டதாரி பெண் கலைவாணி(22). கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியாவார். பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து பழைய பொருட்கள், காசுகள், திருமண பத்திரிக்கைகள் சேகரிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2014 ம் ஆண்டு கின்னஸ் சாதனைக்காக அவர் பெண்கள் நெற்றியில் வைக்கும் ஸ்டிக்கர் பொட்டுகளை சேகரிக்க தொடங்கினார்.

முதலில் ஆயிரம் வெவ்வேறான ஸ்டிக்கர் பொட்டுகளை சேகரிக்க தொடங்கியவருக்கு கடையில் கிடைத்தது வெறும் 40 டிசைன்கள் மட்டுமே. இதையடுத்து அவராகவே பொட்டுகளை டிசைன் செய்ய தொடங்கினார். கடந்த அக். 2014 ம் ஆண்டு ஆயிரம் பொட்டுகளை சேகரித்தார். இதற்காக அவருக்கு தமிழக சாதனை புத்தகம் அமைப்பு சார்பாக விருதும், பாராட்டு சான்றிதழும் கிடைத்தது. இதையடுத்து 3 ஆயிரம் பொட்டுகளை சேகரிக்கும் முயிற்சியில் ஈடுபட்டார். இதற்காக இவருக்கு இந்திய சாதனை புத்தகம் அமைப்பு சார்பாகவும், ஆசியா புத்தகம் அமைப்பு சார்பாகவும் விருதும், பாராட்டு சான்றிதழும் கிடைத்தது. தற்போது இவரது சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் அவருக்கு இதற்கான சான்றிதழும், மெடல்களும் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் ரோட்டாரி கிளப் ஆப் கோல்டன் சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்க பட்டயத் தலைவர் Rtn.Dr.கார்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோட்டரி ஆத்மா கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் க‌லைவாணி கின்னஸ் சாதனை (பொட்டு சேகரித்தமைக்கு )வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>