இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை – 24 மணி நேரத்தில் 40 மி.மீ கொட்டியது

இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்ப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்ப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்ப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் முக்கிய சுற்றுலாத்தலமாக திகழும் இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் மன்மோகன் சிங், சிம்லாவில் மட்டும் கடந்த ஒரே நாளில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், மாநிலத்தின் மற்ற இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும் போக்கவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மைாயின் அளவு குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் அணை ஒன்றிலிருந்து வெளியேறுத் தண்ணீர் பல கிராமங்களை சூழந்துள்ளது. இதனால் இடுப்பளவு ஆற்று நீரில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. புத்தக பைகளை சுமந்தவாறு உயிரையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் ஆற்று நீரை கடந்து செல்கின்றனர். படகுகளை இயக்க வேண்டும் என கிராமத்தினரும், மாணவர்களும் கோரியுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>