இன்று (16.9.16)காவிரி விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கும் வகையில்மாநில அளவிலான பந்த் ஒரு பார்வை

2016-16-9-12-52-20

இன்று நடக்க உள்ள பந்திற்கு கோயம்பேடு காய்கறி மற்றும் பழம் வியாபாரிகள் ஆதரவு அளித்துள்ளதையடுத்து அதிகாலை முதலே கோயம்பேடு மார்க்கெட் வாகனம் மற்றும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது

காவிரி விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநில அளவிலான பந்த் இன்று நடைபெறுகிறது. பல்வேறு தரப்பினரும் பந்திற்கு ஆதரவு தரும் நிலையில் கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மற்றும் பழ வியாபாரிகளும் முழு அடைப்பிற்கு ஆதரவளித்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்கின்றனர்.

இதனால் கோயம்பேடு மார்கெட்டில் காய்கறி மற்றும் பழ கடைகள் அடைக்கப்பட்டதுடன் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் லாரிகளில் வரகூடிய காய்கறி லோடுகளும் இன்று வரவில்லை .

சராசரியாக தினமும் 350 முதல் 400 லாரி லோடுகளில் சரக்குகள் வரும் எனவும் ஆனால் பந்த்தையொட்டி இன்று சரக்குகள் வருகைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர் மேலும் இதனால் பல கோடிகள் வருமான இழப்பு ஏற்படகூடும் எனவும் வியாபாரிகள் கூறுகின்றனர்பைட்- சபீர் அஹமது (காய்கறி வியாபாரி)

 திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காவிரி உரிமையை மீட்கவும், கர்நாடக அரசை கண்டித்தும் சாலை மறியல் போராட்டம். மன்னார்குடி திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு. போராட்டதிற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் பாரதிபுரப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்து மக்கள் கட்சியின் தென்மண்டல தலைவர் தர்மா கார் மர்ம நபர்களால் எரிப்பு. நகர் தெற்கு போலீசார் விசாரணை.

மேட்டூர்,கர்நாடக அரசை கண்டித்து,இன்று நடக்கும் முழுயடைப்பில் பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயங்வில்லை, அரசு பேருந்து இன்று காலை 6 மணிக்கு மேல்தான் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டுள்ளது,

புதுச்சேரி ..தனியார் பேருந்து,ஆட்டோ,டெம்போக்கள் இயக்கப்படவில்லை..பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு பள்ளிகள் கட்டாயம் இயங்கும்,.ஆசிரியர்களும் ஊழியர்களும் பணிக்கு வரவேண்டும்.விடுப்பு எடுக்க கூடாது என பள்ளி கல்வி துறை உத்தரவு.

பெங்களுரிலிருந்து எர்னாகுளம் செல்ல ஒசூர் ரயில் நிலையத்தை வந்தடைந்த எர்னாகுளம் எஸ்பிரஸ் ரயிலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறித்து மறியலில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்ட சுமார 30 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் விடுதலைப் சிறுத்தைகள் சார்பில் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும், கர்நாடகவில் தமிழர்கள் மற்றும் தமிழர்களின் நிறுவனம் தாக்கப்படுவதை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதிநீரை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டடோா் மதுராந்தகம் ரயில்நிலையம் வந்த எழும்பூர் -புதுச்சேரி ரயிலை நிறுத்தி ரயில் மறியல்.

 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரயில் மறியல் போராட்டம். 100பேர் கைது.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக செல்லும் தமிழக அரசு பேருந்துகள் 12 நாளாக இயங்கவில்லை இருமாநில எல்லையில் போலீசார் பாதுகாப்பு.

 திண்டிவனம் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பயணிகள் ரயிலை மறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள மஸ்தான் மாசிலாமணி சீத்தாபதி ஆகியோர் தலைமையில் போராட்டம.

திருப்பூர் மாவட்டம்
காங்கேயம்

பவானிசாகர் அணையில் காவிரி இறுதி தீர்ப்புக்கு புறம்பாக முறையற்ற நீர்நிர்வாகத்தை மேற்கொள்ளும் பொதுப்பணித்துறையை கண்டித்தும் , கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் நத்தக்காடையூரில் கடையடைப்பு , கீழ்பவானி பாசன விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான கடைகள் மற்றும் வணிகநிறுவனங்கள் கடையடைப்பில் பங்கேற்றுள்ளன.

வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையை அடுத்த வாலாஜா அம்மூர் இரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பிருந்தாவனம் விரைவு இரயிலை 500 க்கும் மேற்பட்ட தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் இராணிப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் காந்தி மற்றும் ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்

 காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் விடுதலைப் சிறுத்தைகள் சார்பில் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் நியாயத்தை நிலைநாட்ட வேண்டும், கர்நாடகவில் தமிழர்கள் மற்றும் தமிழர்களின் நிறுவனம் தாக்கப்படுவதை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நதிநீரை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டடோா் ரயில் மறியல்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம்

காவேரி நதிநீர் பிரச்சினையில் அத்துமீறி வன்முறை சம்பங்களில் ஈடுபட்டு வரும் கர்நாடகாவை கண்டித்து அரக்கோணத்தில் நகர திமுக,விசிக சார்பில் ரயில் நிலையத்தில் பிரந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறியல் செய்தனர்.

 
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையை அடுத்த வாலாஜா அம்மூர் இரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி செல்லும் பிருந்தாவனம் விரைவு இரயிலை 500 க்கும் மேற்பட்ட தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் இராணிப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் காந்தி மற்றும் ஆற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரயிலை மறித்து 1 மணி நேரம் போராட்டம் !
காவிரி பிரச்சனையில் மோடி அரசின் தமிழின விரோதப்போக்கை கண்டித்தும் கருநாடக இனவெறியர்களை கண்டித்தும் விடுதலைச்சிறுத்தைகள் நிறுவனத்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில், இன்று ( 16.9.2016) காலை 9 மணியளவில்
பேசின் பிரிட்ஜ் ரயிலடி முன்பு ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

சுமார், 1 மணி நேரத்துக்கு மேல் நடந்த மறியல் போராட்டத்தில் சிறுத்தைகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ரயிலை மறித்த தலைவரை காவல்துறை வழிமறித்து கைது செய்தது. தலைவருடன் பெண்கள் உள்ளிட்ட சிறுத்தைகளும் கைதாகினர். கைதாகும் முன்பு , தலைவர் திருமாவளவன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது,
” காவிரி பிரச்சனையில் மோடி அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. தமிழர்களுக்கு முதல் பகை கருநாடக அரசு அல்ல, மோடி அரசு தான்.

பல பத்தாண்டுகளாக காவிரி பிரச்சனையில் மத்திய அரசு கருநாடகாவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. ஆளும் ஜெயல்லிதா அரசு காவிரி பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் கட்சியில் ஆள் பிடிக்கும் இணைப்பு விழாக்களை வெட்கமே இல்லாமல் நடத்துகிறது.
இது தமிழர்கள் மீதான அக்கறையின்மையை தான் காட்டுகிறது. எதிரக்கடசியான திமுக காவிரி பிரச்சனையை முன்னெடுத்து அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராடி இருக்க வேண்டும். திமுக வும் தம்முடைய கடமையிலிருந்து தவறி விட்டது.

ஆகவே தான் சிறிய கட்சிகள், வணிகர் அமைப்புகள் இப்போது தமிழின உணர்வோடு போராடுகிறோம்.

இனியும் மோடி அரசு மெத்தனம் காட்டாமல், காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்க வேண்டும். மேற்பார்வை குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும்”என்று கூறினார்

பின்பு கைது செய்யப்பட்டு காவல் துறை வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>