இந்தி நடிகர் சல்மான்கான்:பெண்கள் ஆணையத்தில் ஆஜராக மறுத்துவிட்டார்

இந்தி நடிகர் சல்மான்கான்:பெண்கள் ஆணையத்தில்  ஆஜராக மறுத்துவிட்டார்

இந்தி நடிகர் சல்மான்கான்:பெண்கள் ஆணையத்தில் ஆஜராக மறுத்துவிட்டார்

மும்பை,

இந்தி நடிகர் சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ படத்தில் அவர் ஒரு மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றபோது பேசிய 50 வயது நடிகர் சல்மான்கான், சுல்தான் படத்துக்காக மல்யுத்த காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்ததாகவும், இதனால், கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணை போல் வலியை உணர்ந்ததாகவும் உவமையுடன் குறிப்பிட்டார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆகையால், இதற்கு விளக்கம் அளிக்குமாறு மராட்டிய பெண்கள் ஆணையம் சார்பில் அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் அவர் மறுத்துவிட்டார். மாறாக, கடிதம் ஒன்றை பெண்கள் ஆணையத்துக்கு சல்மான்கான் அனுப்பி இருக்கிறார். இதனை சட்டத்துறைக்கு பெண்கள் ஆணைய தலைவர் விஜய ரகத்கர் அனுப்பினார். எனினும், அதில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் பற்றி தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>