இந்தி நடிகர் சசி கபூர் மும்பையில் இன்று காலமானார்

2017-04-12-20-05-20

பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார்.
மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

மும்பை,

கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் சசிகபூர் காலமானார் என்ற செய்தியை நடிகர் மோகித் மார்வா டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

இந்தி திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகரான சசிகபூர் நீண்ட நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார்.

60 மற்றும் 70 ஆம் ஆண்டுகளில் இந்தியில் மிகவும் பிரபலமாக விளங்கியவர் சசிகபூர். சசி கபூர் பிரபல கபூர் குடுமபத்தை சேர்ந்தவர். கொல்கத்தாவில் பிறந்த சசிகபூர் தனது குழந்தை பருவத்திலேயே (1940) சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். அவர் நடிகர் மட்டுமல்ல படங்களை இயக்குவதிலும், தயாரிப்பதிலும் ஈடுபட்டு இருந்தார். 1961 முதல் இதுவரை 100க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்து உள்ளார். 3 முறை தேசிய விருதுகள் வாங்கி உள்ளார், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பத்மபூஷன் விருது உள்பட பல விருதுகளை பெற்று உள்ளார். சசிகபூருக்கு குணால் கபூர், கரண் கபூர் என இரு மகன்களும், சஞ்சனா கபூர் என்ற மகளும் உள்ளனர்.

இவரது மனைவி ஜெனிபர் கெண்டால் 1984 ஆம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>