இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்

தனது பதவிக்காலம் முடிந்ததும் கல்விப்பணிக்கு திரும்புவதாகவும், 2–வது முறையாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பை ஏற்க மாட்டேன் எனவும் ரகுராம் ராஜன் சமீபத்தில் தெளிவுபடுத்தி இருந்தார். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது பதவிக்காலம் முடிந்ததும் கல்விப்பணிக்கு திரும்புவதாகவும், 2–வது முறையாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பை ஏற்க மாட்டேன் எனவும் ரகுராம் ராஜன் சமீபத்தில் தெளிவுபடுத்தி இருந்தார். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக உர்ஜித் பட்டேல் பணியாற்றி வந்தவர். இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னரான ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் 4–ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரகுராம் ராஜன் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த அவர் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நியமிக்கப்பட்டார்.
இவருக்கு எதிராக பா.ஜ.கா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதாவது அமெரிக்க கிரீன் கார்டு (நிரந்தர குடியுரிமை அட்டை) வைத்திருக்கும் ராஜன் மனதளவில் முழுமையான இந்தியர் அல்ல எனவும், அவரது பொருளாதார கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கிறது எனவும் கூறியிருந்தார்.

எனவே ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சாமி பலமுறை கடிதங்களும் எழுதி இருந்தார். இதனால் மத்திய அரசில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் தனது பதவிக்காலம் முடிந்ததும் கல்விப்பணிக்கு திரும்புவதாகவும், 2–வது முறையாக ரிசர்வ் வங்கியின் கவர்னர் பொறுப்பை ஏற்க மாட்டேன் எனவும் ரகுராம் ராஜன் சமீபத்தில் தெளிவுபடுத்தி இருந்தார். இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

2007 முதல் 2011 வரை ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவராக இருந்த உர்ஜீத் பட்டேல் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமனம்.குறிப்பிடத்தக்கது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>