இந்திய மருத்துவ கழகத்தை ஒழித்துகட்டும் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து ஆர்பாட்டம்:சமூக சமத்துவடாக்டர்கள் சங்கம்

மத்திய அரசின் கட்டுபாட்டில், மருத்துவத்துறை கொண்டுவரப்படும் அபாயம் உள்ளது. போதிய மருத்துவ கல்லூரிகள் உருவாக்காததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம். இந்திய மருத்துவ கழகத்தின் மீது குற்றம்சாட்டுவது நியாமற்றது.

மத்திய அரசின் கட்டுபாட்டில், மருத்துவத்துறை கொண்டுவரப்படும் அபாயம் உள்ளது. போதிய மருத்துவ கல்லூரிகள் உருவாக்காததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம். இந்திய மருத்துவ கழகத்தின் மீது குற்றம்சாட்டுவது நியாமற்றது.

இந்திய மருத்துவ கழகத்தை ஒழித்துகட்டும் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட போவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், மத்திய பா.ஜ.க.கவர்மென்ட் ஒவ்வொரு துறையாக தன் கட்டுபாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்துத்துவாவை புகுத்தி வருகிறது. மருத்துவஎடை கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்குவது தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துவரும்
இந்திய மருத்துவ கழகத்திற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் முயற்சியை மத்திய அரசு எடுத்துவருகிறது. இதற்கான மசோதாவையும் ஏற்பாடு செய்து, இதுகுறித்து கருத்து தெரிவிக்க நாளை வரை கெடு விதித்துள்ளது. இந்திய மருத்துவ கழகத்தில் ஊழல் நடந்ததற்கு மத்திய அரசே காரணம். இந்திய மருத்துவ கழகத்தை, மேம்படுத்தி வெளிபடைத்தன்மையை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்குவதன் மூலம் மத்திய அரசு கார்ப்ரெட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

இதனால் மத்திய அரசின் கட்டுபாட்டில், மருத்துவத்துறை கொண்டுவரப்படும் அபாயம் உள்ளது. போதிய மருத்துவ கல்லூரிகள் உருவாக்காததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம். இந்திய மருத்துவ கழகத்தின் மீது குற்றம்சாட்டுவது நியாமற்றது.

மருத்துவ கல்லூரி கட்டணத்தை தானே நிர்ணயித்துகொள்ளும். தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவரப்பட்டால், தாழ்த்தப்பட்ட மக்கள், ஏழை மக்கள் மருத்துவ கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கணிசாமாக்கப்படும். மத்திய அரசு மருத்துவத்துறையை மறைமுகமாக காவியமயமாக்க முயலுகிறது, என அவர் குற்றம்சாட்டினார். தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கபட்டால், மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும். சர்வாதிகார மசோதாவை மத்திய அரசு தடுக்க வேண்டும்.

தமிழக அரசு இந்த பிரச்சினையில் மௌனம் சாதிப்பது ஏற்ற கொள்ளமுடியாது. தமிழக அரசு இதில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும்.

இந்திய மருத்துவ கழகத்தை ஒழித்துகட்டும் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து ஆர்பாட்டதத்தில் ஈடுபட போவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>