இந்தியா – சீனா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அமெரிக்கா வலியுறுத்தல் :மு.திலிப்

201708161114196395_US-wants-India-China-to-have-direct-dialogue-on-their-issues_SECVPF

வாஷிங்டன்,

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாடுகளும் ராணுவத்தை குவித்து உள்ளன. இந்திய படைகளை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தி வரும் சீனா, அங்கு போர் தொடுக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வருகிறது. இதனால் சிக்கிம் எல்லையில் தொடர்ந்து போர்ப்பதற்றம் நீடித்து வருகிறது.

இருநாடுகளும் அங்கு தங்களது ராணுவத்தை நிறுத்தி வைத்து உள்ளதால் அங்கு கடந்த 50 நாட் களாக பதட்டம் நிலவுகிறது.

இதற்கிடையே காஷ்மீரில் லடாக் பகுதியில் ‘பாங்காங்’ ஏரிக்கரை பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயற்சி செய்து உள்ளது.

இந்நிலையில் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும், சீனாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை காரணமாக ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் எல்லையில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவும், சீனாவும் அமர்ந்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதனை நாங்கள் ஊக்குவிக்கிறோம். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என அமெரிக்கா கூறிஉள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>