இந்தியாவில் முதல் முறையாக மானாமதுரை – ராமேஸ்வரம் பசுமை வழித்தடத் திட்டம்

இந்தியாவில் முதல் முறையாக மானாமதுரை - ராமேஸ்வரம் பசுமை வழித்தடத் திட்டம்

இந்தியாவில் முதல் முறையாக மானாமதுரை – ராமேஸ்வரம் பசுமை வழித்தடத் திட்டம்

மானாமதுரை : இந்தியாவில் முதல் முறையாக அசுத்தம் இல்லாத, பசுமையான ரயில் பாதையாக மானாமதுரை – ராமேஸ்வரம் இடையேயான பசுமை வழித்தட திட்டத்தை சென்னையில் இன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைக்கிறார்.

இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலமாக காசிக்கு அடுத்து ராமேஸ்வ ரம் திகழ்கிறது. ராமேஸ்வரத்திற்கு இந்தியா முழுவதும் இருந்து ஆண் டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதற்காக ராமேஸ்வரத்திற்கு வாரணாசி, புவனேஸ்வர், ஓக்கா, திருப்பதி, சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 12 முக்கிய நகரங்களில் இருந்து 16 ரயில் சேவை கள் இயக்கப்படுகின்றன. இது தவிர ஐஆர்சிடிசி சுற்றுலா கழக ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகளால் வழித்தடம் மாசடைந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக மானாமதுரை – ராமேஸ்வ ரம் வழித்தடம் முழுவதும் பசுமை வழித்தட வசதி துவங்கப்பட உள்ளது. 114 கி.மீ., தூர முள்ள மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே இதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் படி மானாமதுரை – ராமேஸ்வரம் மார்க்கத்தில் இயங்கும், 16 ரயில்களைத் தவிர இடையில் உள்ள 14 ரயில் நிலையங்களிலும் பயோ டாய்லெட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த 16 ரயில்களில் உள்ள அனைத்து பெட்டிகளிலும், பயோ – டாய்லெட் வசதி செய்யப்படுகிறது. இது தவிர இந்த வழித் தடத்தின் இரு புறத்திலும் பசுமை மரக் கன் றுகள் நடும் திட்டமும் துவங்க உள்ளது. இத் திட்டத்தை சென்னையில் இன்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைக்கிறார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>