இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்: மத்திய அரசு

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்: மத்திய அரசு

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமானம் குறையும்: மத்திய அரசு
புதுடெல்லி:

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் (2017-18) தனிநபர் வருமான வளர்ச்சிவிகிதம் 8.3 சதவிகிதமாக குறையும். தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 782 என்ற அளவில் இருக்கும்.

2016-17 நிதி ஆண்டில் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் 9.7 சதவீதமாக இருந்தது. அப்போது தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 219 ஆகும்.

மத்திய அரசின் புள்ளிவிவர அலுவலகத்தின் முதல் தேசிய வருவாய் முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கை இந்த தகவலை கூறுகிறது. 2017-18 நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சிவிகிதம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில், கடந்த 4 ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவாக 6.5 சதவிகிதமாக இருக்கும்.

இந்த சரிவுக்கு காரணம், விவசாயம் மற்றும் உற்பத்தி துறைகளின் மோசமான செயல்பாடுகள் என்று சொல்லப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>