இணையதள குற்றங்கள் அதிகரிப்பு 6 மாதங்களில் 27,482 வழக்குகள் பதிவு :மு.திலிப்

இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கணினி தொடர்பான குற்றங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கணினி தொடர்பான குற்றங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு: நாடு முழுவதும் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதுதொடர்பாக கடந்த 6 மாதங்களில் 27,482 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில், கணினி, செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சைபர் கிரைம் என்று அழைக்கப்படும் இணையதள குற்றங்களும் அதிகரித்துள்ளன. எதிரி நாடுகளின் ராணுவ ரகசியங்களை தெரிந்துகொள்ளும் வகையில் கணினியில் ஊடுருவது, அடுத்தவர்களின் விவரங்களை திருடுவது, தகவல்களை அழிப்பது, ஆபாச படங்கள் எடுத்து மிரட்டுவது உள்ளிட்ட குற்றங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில், ரேன்சம்வேர் வைரஸை பரப்பி கணினி செயல்பாடுகளை முடக்கி பணம் பறிக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தியாவில் இணைய குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கணினி தொடர்பான குற்றங்கள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 27,482 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்தாண்டில் 50 ஆயிரம் வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்தாண்டு குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடந்த சைபர் கிரைம்களின் எண்ணிக்கை 1.71 லட்சம். இணையதள குற்றங்களை தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும், தொழில்நுட்ப ரீதியாக போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>