“ஆளுநர் பேசியது வேடிக்கை அல்ல வேதனை”

பல்கலைகழகங்களில் மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இது குறித்து ஆளுநரிடம் ஏற்கெனவே மனு கொடுத்துள்ளோம். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி
mks_Jakkamma
நீதிமன்றத்தில் வழக்கும் போட்டுள்ளோம். ஆளுநரை சந்தித்த போது பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்து மனு கொடுத்தும் நடவடிக்கைகள் இல்லை. ஆனால் இப்போது ஆளுநரே துணை வேந்தர் நியமனத்தை முறைகேடு என பேசியிருப்பது வேடிக்கை அல்ல வேதனை. நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய ஆளுநரே கூறுகிறார். ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளோம் இது தொடர்பாக சந்திக்க. நேரம் தந்தால் சந்தித்து நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்துவோம்.

இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக எந்தளவுக்கு பயமடைந்துள்ளது என்பதற்கு வேறு சாட்சி தேவை இல்லை. தலைமை செயலாளர் அதிமுகவுக்கு கொள்கை பரப்பு செயலாளராக மாறியிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>