ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சி கவிழ்க்கப்படும்: மு.க.ஸ்டாலின்

2017-08-09-13-18-36

தஞ்சை: தமிழகத்தில் தற்போது செயல்படாத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சையில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்சி கவிழ்க்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக தற்போதைய அரசை கவிழ்க்க முயற்சிக்கவில்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறது என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடக்கும் ஆட்சி, நொடிப்பொழுதில் மாற வாய்ப்புள்ளது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவமனை உள்ள மாநிலம் தமிழகம் தான் என்று அவர் கூறியுள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>