ஆறு மாதமாக ஊதியம் இல்லை : 285 அரசு ஊழியர்கள் தவிப்பு

Tamil_News_large_1786695_318_219

தமிழ்நாடு தொழில் வெடி மருந்து நிறுவனத்தை சேர்ந்த, 285 ஊழியர்கள், விருப்ப ஓய்வு கிடைக்காமலும், ஆறு மாதங்களாக ஊதியம் கிடைக்காமலும், தவித்து வருகின்றனர்.

வேலுார் அருகே, 1983ல், 700 ஏக்கரில், தமிழ்நாடு தொழில் வெடி மருந்து நிறுவனமான, ‘டெல்’ துவக்கப்பட்டது. இங்கு, கிரானைட் நிறுவனங்களுக்கு தேவையான, ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டன. நஷ்டம் காரணமாக, 2016ல், உற்பத்தி நிறுத்தப்பட்டது. இங்கிருந்த ஊழியர்கள் சிலர், பிற அரசு நிறுவனங்களுக்கு சென்றுவிட்டனர். மீதமுள்ள, 285 ஊழியர்கள், ஆறு மாதங்களாக ஊதியம் கிடைக்காமல், அன்றாட உணவுக்கு திண்டாடி வருகின்றனர்.
இது குறித்து, ஊழியர்கள் கூறியதாவது: எட்டு மாதங்களாக நிறுவனம் செயல்படவில்லை. பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த போது, 33 பேரை, தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்திற்கும்; 10 பேரை, அரசு சிமென்ட் நிறுவனத்திற்கும் இடமாற்றம் செய்தனர். மீதம் உள்ள, 285 ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை. இவர்களில், 196 பேர் விருப்ப ஓய்வு கேட்டும் கிடைக்கவில்லை. தற்போது, உணவுக்கு வழியின்றி திண்டாடி வருகிறோம். குழந்தைகளுக்கு, கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை. அரசு எங்களுக்கு வழிகாட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>