ஆறுகளை இணைக்க மாநிலங்களவையில் வலியுறுத்தல்

TamilDailyNews_5142894983292

டெல்லி: வடமாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ள நிலமை மோசமடைந்துள்ள நிலையில், ஆறுகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்களவையில் கட்சி வேறுபாடின்றி உறுப்பினர்கள் ஒரு சேர வலியுறுத்தியுள்ளனர். வெள்ள நிலைமை குறித்து மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். வடமாநிலங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற தமிழக MP-க்கள் நீண்ட நாள் கோரிக்கையான ஆறுகள் இணைப்பு விவகாரத்தை எழுப்பினர். இது குறித்து பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, ஆறுகளை இணைக்காத வரை நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாது. வடமாநிலங்களில் கரை புரண்டோடும் வெள்ளத்திற்கு ஏராளமானோர் பலியாகியுள்ளனர். தெற்கே விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குடிக்க நீரின்றி ஆடு, மாடுகள் செத்து மடிகின்றன. ஒரு பக்கம் வெள்ளமாக ஓடும் உபரி நீர், மறுபுறம் தண்ணீரின்றி கடும் வறட்சி. இதனை மாற்ற வேண்டுமானால் ஆறுகளை இணைப்பது அவசியம் என்றார்.

பின்னர் பேசிய அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், ஆறுகுள் இணைப்பு கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கேற்ப தீபகற்ப நதிகளை இணைக்க வேண்டும் என்றார். நதிகள் மற்றும் ஆறுகளை இணைப்பதன் மூலம் உபரி நீரை திருப்பி விட்டு வறட்சி மாநிலங்களுக்கு உதவ முடியும் என்பது மாநிலங்களவை உறுப்பினர்களின் கருத்து. இதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கி, விவசாயம் செழிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>