ஆர்.கே. நகர் நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார்.

ஆர்.கே. நகர் நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைக்கிறார்.

ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை மற்றும் பட்டா பெறுவதற்கான உத்தரவுகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாதொடங்கிவைக்கிறார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முதல்- அமைச்சர் பொறுப்பை தான் கவனிக்க வேண்டியிருந்ததால், தனது தொகுதி (ஆர்.கே. நகர்) மக்களிடம் குறைகளை கேட்டு பெறுவதற்காக, முதல்-அமைச்சர் தனி பிரிவு சிறப்பு அதிகாரி கணேஷ் கண்ணாவை அவர் நியமித்தார்.
இவர் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
இந்த மனுக்கள் உடனடியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஆர்.கே. நகர் தொகுதி மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் பெரும்பாலானவை, ஓய்வூதிய தொகை கேட்டும், பட்டா கேட்டும் வரப்பெற்றவை ஆகும்.
எனவே அது தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
அதன் அடிப்படையில், ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை மற்றும் பட்டா பெறுவதற்கான உத்தரவுகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) தொடங்கிவைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>