ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டி

 இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன். மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். தினகரனை விட அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்”


இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன். மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். தினகரனை விட அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்”

சென்னை : சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி.டி.வி. தினகரனை விட அதிக ஓட்டுக்கள் பெறுவேன் என்று வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.கே.நகர். தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சசிகலாவை எதிர்த்து வெளியே வந்து சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தலில் போட்டியிட்டு தங்கள் பலத்தை காட்டுவதில் ஓ.பி.எஸ். அணியினர் மும்முரமாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சசிகலா அணி சார்பில் ஆர்.கே. நகரில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடுபவர் யார் என்ற பரபரப்பு நிலவி வந்தது. தொடர்ந்து ஓ.பி.எஸ். அணி சார்பில் யாரை நிறுத்துவது என்று ஆலோசனை நடந்தது.

இந்நிலையில், சென்னை ஆர்.ஏ.புரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று மாலை நடந்தது.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் மூத்த தலைவர்கள் மதுசூதனன், பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மா.பா.பாண்டியராஜன், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரம் கூட்டம் நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சி மன்ற குழு ஒரு மனதாக முடிவு செய்ததில் கட்சியின் மூத்த தலைவர் மதுசூதனன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்றார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதுசூதனன் அளித்த பேட்டியில், “ஆர்.கே.நகர் தொகுதியில் நான் வசித்து வருகிறேன். நான் கட்சியில் பல வருடங்களாக இருந்து வருகிறேன். இதனால், அந்த தொகுதியில் மக்கள் ஆதரவு எனக்கு அதிகமாக உள்ளது.
அதிமுகவில் இரண்டு அணி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், யார் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவார்கள் என்ற பரபரப்பும் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டு பேரும் ஒரே சின்னத்துக்கு மோதி வருவதால், சின்னம் ஒதுக்கிய பின்னரே இரண்டு அணி வேட்பாளரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>