ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் திமுகவின் எதிர்காலமும் ? கதிர்

 இந்த நிமிடம் வரையில்    திமுக தலைவர் பதவியை பல்வேறு விமர்னங்களுக்கு  இடையிலும் தன்னோடு வைத்திருந்த  கருணாநிதி  ஸ்டலின்இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தது சரியா ? இல்லை  நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய இல்லை என்று திமுக தலைவருக்கு சொல்வாரா? செயல்தலைவர்.

இந்த நிமிடம் வரையில் திமுக தலைவர் பதவியை பல்வேறு விமர்னங்களுக்கு இடையிலும் தன்னோடு வைத்திருந்த கருணாநிதி ஸ்டலின்இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தது சரியா ? இல்லை நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டிய இல்லை என்று திமுக தலைவருக்கு சொல்வாரா? செயல்தலைவர்.

ஆர்.கே ,நகர் தொகுதியில் உள்ள மக்கள் தொகையில் பெண்கள் 1,34,307 பேர், ஆண்கள் 1 ,28,305 இந்த தொகுதியில் மொத்தம் 6 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர்.
குறிப்பாக போட்டி யாருக்கு என்றால் தினகரனுக்கும், மதுசூதனுக்கும் தான் அவர்கள் இவருக்கும் தான் யாருக்கு மக்கள் செல்வாக்கு இருக்கு யாரு உண்மையான அண்ணா திமுக என்பதில் தான் இந்த இடை தேர்தல் இருக்கு என்றால் அரசியல் நோக்கர்களிடையே புதியதாக விவாதம் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
அந்த விவதாமும் வழக்கம்போல திமுகவிடம் தான். இந்த இடைத்தேர்தல் என்பது என்னவோ? சசிகலாவுக்கும் , BJP பன்னீர் செல்வத்துக்கும் தான்.
ஆனால் ஒரு விஷயத்தை உற்று நோக்கும் போது 5 மாநில தேர்தல்கள் ஆனாலும் ஷர்மிளா 91 ஓட்டு வாங்கினதும், பஞ்சாப்பைதவிற மற்ற மாநிலங்களில் BJP பெரியதாக கால் ஊன்றியிருப்பது சாதியாகவும்,மதமாகவும் , இதில் சாதி மதத்துக்கு எதிரானவர்கள் முற்போக்கு சிந்தனை வாதிகள் என எல்லோரும் தனிதனியாக செயல்பட்ட தின் விளைவு BJP யின் வெற்றியாக செல்லப்பட்டாலும், BJP வேறு மாதிரியாக சொல்லப்படுகிறது.

அது மாதிரி தமிழ் நாட்டில் இடைத்தேர் நடந்தால் அது திமுக விற்க்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்று சொல்கின்றார்கள் நமக்கு ஓன்றும் புரியவில்லை பொது தேர்தலுக்கும் இடைதேர்தலுத்தல் நிறைய வேறுபாடு இருகிறது.

பொதுவாக இடைத்தேர்தல் என்றால் தேர்தல் அதிகாரியில் இருந்து எல்லாமே ஆளும் கட்சியின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டதுதான்.
இது போதாது என்று எல்லா மந்திகளும் அங்கு முகமிட்டு மக்களுக்குவேண்டியதை செய்து கொடுப்பார்கள்.
மக்களும் எதுக்கு வம்பு அளும் கட்சி க்கே ஓட்டை போடுவோம் அவங்க ஆட்சியிலே இருக்கிறப்ப இவங்க(எதிர்கட்சி) வந்து என்ன செய்யப் போறாங்க என்ற எண்ணம் பொதுவாவே மக்களிடையே இருக்கிறது.
இதை நோக்கியே அளும் கட்சியின் பிரச்சாரம் அமைகிறது இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அளும் கட்சியினர் மக்களை மென்மையாக மிரட்டவும் செய்வார்கள் நமக்கு ஏன் வம்பு எனஅளும் கட்சிக்கே வாக்களிக்கும் நிலைக்கு மக்களும் தள்ளப்படுகின்றனர்.
சுதந்திரத்துக்குஅப்புறம் நடைபெற்றபெரும்பாலானஇடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியேவெற்றி பெற்றிருக்கிறது.
1973திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தால்எம்.ஜி.ஆர் வெற்றி பின்னர் நடந்த பொதுதேர்தலில் அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
அது போல 1999ல் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்று திமுகவை தேற்கடித்து ஆட்சியை கைபற் பெற்றுகிறார்.
2004ல் நடைப்பெற்ற இடைத் தேர்தளில் திமுக வெற்றிப்பெற்று பிறகு நடந்த பொது தேர்தலில்வெற்றிபெற்று ஆட்சியைபிடிக்கிறது.
அதைப் போல இந்த இடைத்தோர்தல் ஆளும் கட்சிக்கு சதாகமாக இருக்குமா? அல்லது எதிர்கட்சிக்கு சாதகமாக இருக்கப் போகிறதா? என்பது தேர்தளுக்கு பிறகு தான் தெரிய வரும்
என்றாலும்இந்த தேர்தலை பொறுத்தவரையில் ஆளும் கட்சி வரிசையில் ஜெயலிதாவும்,எதிர்கட்சி வரிசையில் கருணாநிதியும், இல்லாத நடைபெறும் முதல் தேர்தல்,
அது மட்டுமல்ல திமுகவின் செயல்தலைவராக ஸ்டலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல்
இது மட்டுமல்ல இனி திமுகவை வழிநடத்தி கொண்டு செல்லக் கூடியவரும் அவர் தான்.அவரை எதிர்த்து அரைசியல் செய்யக் கூடி ஆளும் கட்சி மூன்றாக உடைந்திருக்கிறது.
மூன்றாவது அணி அப்படி ஒன்று இருக்கிறதா? என்று கேட்க வேண்டிய இடத்தில் தான் இருக்கின்றன.
இந்த தேர்தலில் திமுக ஜெயித்தாலும் தோற்றலும் பெரிய பாதிப்பு ஒன்றும்இருக்கப்போவதில்லை
ஆனால் இந்த இடைத் தோர்தலில் திமுக தோற்றால் அதன் செயல் தலைவர் ஸ்டலினுக்கு தான் நெருக்கடி ஜெயலலிதா இல்லாத தலமை மற்றும் மூன்று அணியாக உடைந்திருக்கும் அண்ணா திமுக
இப்பகூட ஸ்டலின் தலமையிலான திமுக வெற்றி பெற முடியாமல் போகுமானால் இது வழக்கமான இடைத்தேர்தல் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்று எடுத்து கொள்ள முடியுமா?
இந்த நிமிடம் வரையில் திமுக தலைவர் பதவியை பல்வேறு விமர்னங்களுக்கு இடையிலும் தன்னோடு வைத்திருந்த கருணாநிதி ஸ்டலின்இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தது சரியா ?
இல்லை நான் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது இல்லை என்று திமுக தலைவருக்கு சொல்வாரா? செயல்தலைவர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>