ஆபத்து நேரத்தில் தானாக வெளியேறும் விமானத்தின் கருப்பு பெட்டி:மு.திலிப்

2017-02-08-02-24-17

புதுடெல்லி : விமானங்களில் கருப்பு பெட்டி என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த பெட்டிகள் விமானங்கள், விபத்துக்குள்ளாகும்போது சேதமடைகிறது. இதனால் விமானம் விழுந்த இடத்தை கண்டுபிடிப்பது அரிதான விஷயமாக அமைகிறது. இந்நிலையில், விமானம் விபத்துக்கு உள்ளாகும்போது, அதில் இருந்து தானாகவே வெளியேற்றப்படும் வகையில் கருப்பு பெட்டியை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி வருகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடலில் விபத்து நேரும்போது பொதுவாக விமானத்தின் கருப்பு பெட்டியும் அதனுடனேயே நீரில் மூழ்கி விடுகிறது. இதனால் குறிப்பிட்ட நாட்களுக்கும் அதை கண்டுபிடிக்காவிட்டால், விமானத்தையே கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

இந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக, விமானம் விபத்துக்கு உள்ளாகும்போது, தானாகவே விமானத்தில் இருந்து வெளியேறும் வகையிலும், தண்ணீரில் மிதக்கும் வகையிலும் கருப்பு பெட்டிகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. இதை மேம்படுத்தி விமானங்களில் பயன்படுத்த டி.ஆர்.டி.ஓ முடிவு செய்துள்ளது. சோதனைக்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இதை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் விபத்துக்குள்ளாகும் விமானத்தை பற்றியும், எதனால் விபத்து நடந்தது என்பதையும் எளிதாக கண்டறியம் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>