ஆபத்தானவர் பெயர் பட்டியலில் வைகோ : நாட்டிற்குள் விட மறுத்த மலேசிய

பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், விமானநிலையத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைகோவை அமர வைத்துள்ளனர்.

பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், விமானநிலையத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைகோவை அமர வைத்துள்ளனர்.

கோலாலம்பூர்: மலேசிய நாட்டிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் என்ற பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம். விடுதலை புலிகள் அமைப்பை சார்ந்தவர் என்று கூறி வைகோவிடம் மலேசிய அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி, மலேசியாவிற்குள் அனுமதிக்க முடியாது என கறாராக கூறிவிட்டனர். மேலும் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், விமானநிலையத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைகோவை அமர வைத்துள்ளனர்.

அமர வைத்த இடத்தை விட்டு எழுந்திருக்க கூடாது என்று வைகோவிற்கு மலேசிய அதிகாரிகள் கட்டுப்பாடுகள் வேறு விதித்துள்ளனர். தாம் இந்திய குடிமகன் என வைகோ கூறியதை மலேசிய அதிகாரிகள் ஏற்கவில்லை. பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் வைகோவை அனுமதிக்க கூறி எடுத்த முற்சிகளும் அதிகாரிகளிடம் பலிக்கவில்லை. இலங்கையில் வைகோ மீது வழக்குகள் இருப்பதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே மலேசியாவிற்குள் அவரை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவே வைகோ அந்நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மலேசியாவிலிருந்து இன்று இரவு 10.45 அவர் மீண்டும் இந்தியாவிற்கு திருப்பியனுப்பப்படுகிறார். சென்னையில் உள்ள மலேசிய தூதரகம் அவருக்கு விசா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>