ஆதார் இல்லாவிட்டால் ரயில் டிக்கெட் கிடையாது: கட்டாய நடைமுறை விரைவில் அமலாகிறது

11114

புதுடெல்லி : ஆதார் எண் சமர்ப்பித்தால் மட்டுமே ரயில் டிக்கெட் பெற முடியும் என்ற புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. பண்டிகைகள், தொடர் விடுமுறை தினங்களின்போது ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரைக்கொம்புதான்.

நள்ளிரவு முதல் இடம்பிடித்து வரிசையில் நின்றால் கூட சில நிமிடங்களில், ஏன்… நொடிகளில் கூட ரயில் டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. ஆன்லைன் முன்பதிவு மட்டுமின்றி புரோக்கர்களும் இதற்கு காரணம். டிக்கெட் ஏஜென்ட்கள் புரோக்கர்களை வரிசையில் நிறுத்தி பல்வேறு பெயர்களில் டிக்கெட் வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதை அவ்வப்போது ரெய்டு நடத்தி கட்டுப்படுத்தினாலும், தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

எனவே, புதிய நடைமுறையை செயல்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. தற்போது உள்ள அடையாள சான்றுகளில், ஒருவருக்கு ஒரே சான்று என இருப்பது ஆதார் மட்டும்தான். போலி தயாரிக்க முடியாது.

அப்படியே இருந்தாலும் ஸ்கேன் செய்வதன் மூலம் உடனடியாக கண்டுபிடித்து விடமுடியும். எனவே, ஆதார் அட்டையை அடிப்படையாக வைத்து டிக்கெட்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ரயில்வே அமைச்சகம் நீண்ட காலமாக ஆலோசனை நடத்தி வந்தது.

தற்போது நாடு முழுவதும் அசாம், மேகாலயா தவிர 105 கோடிக்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இதுமட்டுமின்றி, நாள்தோறும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் பதிவு செய்யப்படுகிறது. ஆதார் அடிப்படையில் தினமும் 60 லட்சத்துக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் நடக்கின்றன. ஆதார் வழங்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 241 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

மோசடிகளையும் புரோக்கர்கள் அட்டகாசத்தையும் தடுக்க அரசிடம் இருக்கும் ஒரே ஆயுதம் ஆதார்தான்.

எனவே ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மட்டுமின்றி, கவுன்டரில் டிக்கெட் வாங்குவது, முன்பதிவு அல்லாத டிக்கெட் என எல்லாமே ஆதார் எண்ணை சமர்ப்பித்தால்தான் வாங்க முடியும் என்ற நடைமுறையை ரயில்வே விரைவில் செயல்படுத்த இருக்கிறது.

ஆதாரை எந்தெந்த வகையில் பயன்படுத்துவது என கொள்கை வரையறுக்கப்படுகிறது. இதில் ரயில் டிக்கெட்டுக்கும் கட்டாயமாக்க உத்தேசம் உள்ளது. இதனால் புரோக்கர்கள் தொல்லை ஒழியும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கும். அநேகமாக வரும் டிசம்பரில் இருந்து அமல்படுத்தப்பட வாய்ப்புகள் இருக்கின்றன என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதார் எண் விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரையில் அரசு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ரயில் டிக்கெட்களுக்கு எந்த வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.

முதியோர் சலுகைக்கும் கட்டாயம்

ஐஆர்சிடிசி தலைவர் ஏ.கே.மனோச்சா கூறுகையில், ‘‘மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் கட்டண சலுகை உண்டு. ஆண்கள் 40 சதவீதமும், பெண்கள் 50 சதவீதமும் கட்டண சலுகை பெறுகின்றனர்.

இதுதவிர பல்வேறு பயணிகளுக்கும் சலுகை கட்டணம் உள்ளது. இதனால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ₹1,500 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, ஆதார் இருந்தால் மட்டுமே மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்குவது எனவும், இதை டிசம்பரில் நடைமுறைப்படுத்துவது எனவும் ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

ஆன்லைனில் ஒருவர் அதிகபட்சம் 6 டிக்கெட் மட்டுமே எடுக்கலாம். ஆதார் அடிப்படையில் வரும்போது இது வரம்பு தேவையில்லை. ஏனெனில் இத தவறாக பயன்படுத்தப்படுகிறதா எனவும் கண்டறிய முடியும்’ என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>