ஆதார் அட்டை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பாசிச படைகளுக்கு பெரிய அடி ராகுல்

201708241425441230_Rahul-Gandhi-welcomes-SC-ruling-says-decision-a-major-blow_SECVPF

புதுடெல்லி,

ஆதாரை அடையாள அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா? என்பது குறித்த வழக்கில் விசாரணையை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு, இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரவேற்று உள்ளார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பாசிச படைகளுக்கு பெரிய அடி எனவும் விமர்சனம் செய்து உள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “சுப்ரீம் கோர்ட்டில் முடிவானது பாசிச படைகளுக்கு பெரிய அடியாகும். கண்காணிப்பு மூலமான அடக்குமுறை என்ற பாரதீய ஜனதாவின் கொள்கையை நிராகரிக்கும் ஒலியாகும்,” என குறிப்பிட்டு உள்ளார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் வரவேற்று உள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>