ஆண்டிமடம்சிலம்பூர் அய்யனார் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே தகராறு : 144 தடை உத்தரவு

ஆண்டிமடம்சிலம்பூர் அய்யனார் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே தகராறு : 144 தடை உத்தரவு

ஆண்டிமடம்சிலம்பூர் அய்யனார் கோயிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே தகராறு : 144 தடை உத்தரவு

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கோயிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால், கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டார்.

ஆண்டிமடம் அருகேயுள்ள சிலம்பூர் கிராமத்தில் உள்ளது அய்யனார் கோயில். இக்கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக சுவாமி கும்பிடுவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்து வந்தது.

இப்பிரச்னையை தீர்ப்பதற்காக கடந்த ஆண்டில் கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அதில் தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில், சிலம்பூர் காலனி தெருவைச் சேர்ந்த முத்துசாமி என்பவர், தனது கனவில் அய்யனார் சுவாமி வந்து தனக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறியதால், கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரு தரப்பை சேர்ந்தவர்கள், அந்த கோவிலில் தனியாக சாமி சிலை அமைக்க முயற்சி செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கோவிலுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு ஆடி 3-ம் வெள்ளிக்கிழமையையொட்டி நடைபெற்ற வழிபாட்டிலும் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கோட்டாட்சியர் ராஜகோபால் சிலம்பூர் கிராமத்தில் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த தடை உத்தரவு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக கோவில் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதம் வழிபாடு நடத்துவதற்காக இரு தரப்பினரும் அரியலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கோவிலை திறந்து வழிபாடு நடத்த உத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி ஒரு தரப்பை சேர்ந்த பக்தர்கள் கிடா வெட்டி, பூஜைகள் செய்து வழிபட்டனர். அப்போது அங்கு வந்திருந்த மற்றொரு தரப்பினர் தங்களது செல்போனில் கோவிலை படம் பிடித்துள்ளனர்.

இதையறிந்த எதிர்தரப்பினர் தட்டிக்கேட்கவே, இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 14 பெண்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவி வந்ததால், உடையார்பாளையம் கோட்டாட்சியர் நேற்றிரவு முதல் மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து ஜெயங்கொண்டம் தாசில்தார் திருமாறன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் நேற்றிரவு சிலம்பூர் அய்யனார் கோவிலை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

மேலும், சிலம்பூர் கிராமத்தில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>