ஆணவ படுகொலையை கண்டிக்க வேண்டும் – ராஜூ முருகன்

வாக்கு வங்கி அரசியல் செய்யாமல் திமுக, அதிமுக ஆணவ படுகொலைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என இயக்குனர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடரும் சாதி ஆணவப்படுகொலை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் ராஜீ முருகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு சேலம் ராஜலட்சுமி ஓசூர் நந்திஷ் சுவாதி உள்ளியிட்ட ஆணவப்படுகொலை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜூ முருகன், ஆணவப் படுகொலைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டுமென்றும், வாக்கு வங்கியை குறிவைக்காமல் அதிமுக திமுக போன்ற கட்சிகள் ஆணவப்படுகொலை கண்டித்து குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>