ஆட் குறைப்பு நடவடிக்கையில் டுவிட்டர்; 300 பணியளார்களை நீக்கம்

%e0%ae%95

பிரபல வலைத்தள நிறுவனமான டிவிட்டருக்கு அண்மையில் நஷ்டங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை ஈடுசெய்ய நிறுவனத்தின் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளில் டிவிட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

டிவிட்டர் நிறுவனம் நஷ்டங்களை சமாளிக்கும் வகையில் கடந்த வருடம் எட்டு சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. இதனையடுத்து 336 பணியாளர்கள் வேலையை இழந்தனர். இதே போன்று நடப்பு ஆண்டிலும் எட்டு சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய டிவிட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக கிட்டத்தட்ட 300 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

டிவிட்டர் நிறுவனம் கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர்கள் ஒரு ஆண்டுக்கு இழப்புகளை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது

ஆனால் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க டுவிட்டர் மறுத்துவிட்டது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>