ஆட்சியாளர்களை அகற்றினால் விடை கிடைக்கும்:மு.க.ஸ்டாலின்

2017-24-08-14-11-32

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் ஆட்சியாளர்களை அகற்றினால் விடை கிடைக்கும் என மு.க. ஸ்டாலின் பேசினார்.
நீட் தேர்வில் விலக்கு பெற முடியாத தமிழக அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் 7 எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

‘நீட்’ தேர்விற்கு எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி . திமுக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தில் ‘நீட்’ நுழைய முடியவில்லை இந்த தேர்வில் விலக்கு பெற முடியாததற்கு தமிழக அரசு தான் காரணம். விரும்பாத மாநிலங்களில் நீட் தேர்வை திணிக்க கூடாது என பார்லி குழு அறிவுரை வழங்கியது . பார்லியில் சட்டம் கொண்டு வந்து நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளனர்.

நீட் தேர்வில் ஐகோர்ட் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். சமூக நீதியை தடுக்கவே நீட்தேர்வை பா.ஜ., கொண்டு வந்துள்ளது.தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சமூக நீதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு கொள்கை கேள்விக்குறியாகியுள்ளது.கிராமபுற மாணவர்கள் டாக்டராவதை பா.ஜ., விரும்பவில்லை. ஆனால், இதனை வேடிக்கை பார்க்கும் ஆட்சியாக குதிரைபேர ஆட்சி உள்ளது.

முதல்வர், அமைச்சர் உறுதியளித்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. சட்டசபையை மத்திய அரசு அவமானபடுத்தியுள்ளது. டில்லியில் நல்லது நடக்கும் என அமைச்சர்கள் பேட்டி கொடுத்தது இப்போது தான் புரிகிறது அமைச்சர்கள் தங்களுக்கு நல்லது நடக்கவே டில்லி சென்றார்கள். கொள்ளை புறமாக ஆட்சியை கைப்பற்ற நாங்கள் விரும்ப மாட்டோம். நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது. தமிழக நலன்கள் மத்திய அரசிடம் மாநில அரசால் அடகு வைக்கப்பட்டுள்ளது. மாநில சுயாட்சியை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.திமுக வரும் காலத்தில் நடத்தும் போராட்டம் கடைசி போராட்டமாக இருக்கும். ஒராண்டு விலக்கு அளிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறியது ஏன்? குதிரை பேர ஆட்சியை அகற்றினால் தான் விடை கிடைக்கும். மாநில ஒதுக்கீட்டில் 20 இடங்களில் 5 இடங்கள் மட்டுமே மாநில பாட திட்ட மாணவர்களுக்கு கிடைத்துள்ளது. இளைஞர்களின் சாபம், வயிற்று எரிச்சல் ஆட்சியாளர்களாகிய உங்களை விடாது. இவ்வாறு அவர் பேசினார்.

Adv

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>