ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டுக்காக சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்

ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டுக்காக சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்

ஆடி அமாவாசை சிறப்பு வழிபாட்டுக்காக சதுரகிரி மலையில் குவியும் பக்தர்கள்

வத்திராயிருப்பு : ஆடி அமாவாசை விழாவுக்காக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலை சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு ஆடி அமாவாசையுடன், ஆடி 18ம் பெருக்கு, குருப்பெயர்ச்சி ஆகிய மூன்று விஷேசங்களும் நாளை ஒரே நாளில் வருகின்றன. இதனால், சுந்தரமகாலிங்கம் கோயிலில் பல்லாயிரம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, கடந்த 28ம் தேதி முதல் ஆக. 4 வரை மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன், மலைக்கோயில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த மழை பெய்து, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறையில் வனத்துறை கேட் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2 கிமீ தூரத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் அவர்களது உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்யவில்லை.
பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கத்துக்கு நேற்று காலை 6 மணிக்கு காலசந்தி பூஜையும், பகல் 12 மணியளவில் உச்சிகால பூஜையும் நடந்தது. மாலை நான்கரை மணி முதல் 6 மணி வரை பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றது.
ஆடி அமாவாசையையொட்டி ஏடிஎஸ்பி மாடசாமி தலைமையில் டிஎஸ்பிக்கள் கோமதி, சங்கரேஸ்வரன், வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாணிப்பாறை வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களுக்கான அனுமதி நேரத்தை மாலை 6 மணி வரை நீட்டிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்களுக்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியன், திட்ட ஆணையாளர் ராஜ்ேமாகன், மகராஜபுரம் ஊராட்சி தலைவர் கருப்பணன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். தாணிப்பாறை அடிவார பகுதியில் ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலர் சங்கர் தலைமையில் துப்புரவு பணிகள் நடைபெற்று வருகின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வேல்முருகன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>