ஆடி அமாவாசை கடல் நதி மற்றும் அருவிக்கரைகளில் குவிந்த மக்கள்

ஆடி அமாவாசை கடல் நதி மற்றும் அருவிக்கரைகளில் குவிந்த மக்கள்

ஆடி அமாவாசை கடல் நதி மற்றும் அருவிக்கரைகளில் குவிந்த மக்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு அன்று ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் குவிவார் கள்.

ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் நதி, கடல், அருவிக் கரைகளில் ஏராளமானோர் ஆடி அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்கின்றனர்.
இன்று ஆடிப் பெருக்குடன் ஆடி அமா வாசை மற்றும் குரு பெயர்ச்சி விழாக்களும் சேர்ந்து வந்ததால் இன்று ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பெருவாரியான பக்தர்கள் குவிந்தனர்.அதிகாலை 5 மணிக் கெல்லாம் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மக்கள் பவானி கூடுதுறைக்கு வர தொடங்கினர்.

இவர்கள் பஸ்கள் மற்றும் கார், வேன்களில் வந்தனர். அதிகாலையிலேயே கூடு துறையில் குவிந்து புனித நீராடினர். அதன் பிறகு சங்கமேஸ்வரர் மற்றும் வேத நாயகி அம்மனை வழி பட்டனர். வழக்கம் போல் புதுமண தம்பதிகளும் இன்று பவானி கூடுதுறைக்கு ஜோடி, ஜோடியாக வந்து குவிந்த னர். அவர்கள் புதுமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டு காவிரி தாயை வழி பட்டனர்.

காவிரி கரையோரம் ஏராளமான பக்தர்கள் ஆற்றில் குளித்து விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். மேலும் ஏராளமான பெண் பக்தர் கள் முளைப் பாரிகள் எடுத்து காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

இதுபோல் ஆடிபெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரி ஆற்றில் இன்று பக்தர்கள் புனித நீராடிய காட்சி.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், குற்றாலம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஏரல், பழையகாயல் உள்ளிட்ட இடங்களில் குவிந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தால் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

ஆடி அமாவாசையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் முன்னோர்களை நினைவு கூறும் வகையில் தர்ப்பணம் செய்ய ஏராளமான மக்கள் குவிவந்தனர்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>