ஆசிரியர்கள் பணியிடை நீக்கத்தை மறுபரிசீலனை செய்ய உத்தரவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை 45 நாட்களுக்கு பணியிடை நீக்கம் செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
செப்.7 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியிருந்தார்.
TY23-JACTO-jakkimma
நீதிபதி கிருபாகரனை விமர்சித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்திருந்தனர். நீதிபதியை விமர்சித்த ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீதிபதியை விமர்சித்ததற்காக ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் ஊடகங்கள் மூலம் மன்னிப்பு கேட்டனர்
நிர்வாகிகள் மன்னிப்பு கேட்டதால் ஆசிரியர்களை இடை நீக்கம் செய்த உத்தரவை மறுபரிலீனை செய்ய ஆணையிட்ட நீதிமன்றம் வழக்கை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>