ஆகஸ்ட்20ம் தேதி: உலக கொசு ஒழிப்பு தினம்

இங்கிலாந்து டாக்டர் ரொனால்டு ரோஸ் என்பவர், 1897ம் ஆண்டு, “அனாபெலஸ்’ என்ற பெண் கொசுக்கள் தான், மனிதர்களுக்கு மலேரியாவை பரப்புகிறது என்ற உண்மையை கண்டுபிடித்தார். “பிளாஸ்மோடியம்’ என்ற ஒட்டுண்ணி “அனோபிலிஸ்’ எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது.

இங்கிலாந்து டாக்டர் ரொனால்டு ரோஸ் என்பவர், 1897ம் ஆண்டு, “அனாபெலஸ்’ என்ற பெண் கொசுக்கள் தான், மனிதர்களுக்கு மலேரியாவை பரப்புகிறது என்ற உண்மையை கண்டுபிடித்தார். “பிளாஸ்மோடியம்’ என்ற ஒட்டுண்ணி “அனோபிலிஸ்’ எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது.

உருவத்தில் சிறியதாக இருக்கும் கொசு, மனி தர்களுக்கு பல நோய்களை பரப்புவதில் முதல்வனாக இருக்கிறது. கொசுக்களில் 3000 வகை இருந்தாலும், மலேரியாவை உருவாக்கும் “அனாபெலஸ்’, டெங் குவை உருவாக்கும் “ஏடிஸ்’, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உருவாக்கும் “குளக்ஸ்’ ஆகிய மூன்றும் தான் கொடியவை. இதன் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆக.,20ம் தேதி உலக கொசு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கிலாந்து டாக்டர் ரொனால்டு ரோஸ் என்பவர், 1897ம் ஆண்டு, “அனாபெலஸ்’ என்ற பெண் கொசுக்கள் தான், மனிதர்களுக்கு மலேரியாவை பரப்புகிறது என்ற உண்மையை கண்டுபிடித்தார். “பிளாஸ்மோடியம்’ என்ற ஒட்டுண்ணி “அனோபிலிஸ்’ எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது.

இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை தாக்கி அழிக்கிறது. மரணத்தை விளைவிக்கும் அளவு பயங்கரமானது. இவரது கண்டுபிடிப்பை அங்கீகரிக்கும் விதமாக, ஆக. 20ம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவரது கண்டுபிடிப்பி ற்காக, 1902ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரொனால்டு ரோஸ், 1857ல் பிரிட்டிஷ் இந்தி யாவில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஆங்கிலேய ராணுவ அதிகாரி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை லண்டனில் நிறைவு செய்தார். படிப்பை முடி த்து இந்தியா திரும்பிய பின், மலேரியாவை பற்றிய ஆராய்ச்சி யில் 1882 முதல் 1899 வரை ஈடுபட்டார். பிரிட்டன் சார்பில் நோ பல் பரிசு வென்ற முதல் நபர் என்ற பெருமை பெற்றார்.கொசுக்கள் நீர்நிலைகளில் தான் முட்டையிட்டு உருவாகின்றன. எனவே வீடுகளின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மனிதர்களைக் கொல்லும் உயிரினப் பட்டியலில் கொசுக்களுக்கு சிறப்பிடம் தரலாம். கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய்களால் உயிரிழப்புகள் நிறைய ஏற்பட்டுள்ளன.தட்ப வெப்ப சூழ்நிலை உள்ள ஆசிய நாடுகள் குறிப்பாக தென் கிழக்காசிய நாடுகளில் கொசுக்கள் பரவலாக உள்ளன. உலக சுகாதார நிறுவனம் இதற்காக பிராந்திய அளவில், தென் கிழக் காசிய த்திற்கான அலுவ லகத் தை டில்லியில் அமைத் து ள்ளது.இந் தி யா முழுவதிலும் உள்ள கொசுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவனம் 1985 மே 1ம் தேதி அமைக்கப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் கொசுக்களால் காய்ச்சல், உயிரிழப்பு ஏற்படுகிறதோ அந்த பகுதிகளுக்கு விஞ்ஞானிகள் நேரடியாக சென்று ஆய்வுகள் செய்து, இழப்புகள், கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அரசுக்கு தெரிவிக்கின்றோம்.

பீகாரில் முஜபூர் நகர், மேற்கு வங்கத்தில் ஜல்பகிரி, குஜ்பீகார், தக்ஷின் தின ஜ்பூர், டார்ஜிலிங், உத்த ரபிரதேசத்தில் கோரக்பூர், கேரளத்தில் குட்டநாடு, ஆந்திராவில் கர்னூல், தமிழகத்தில் கடலூரில் கொசுக்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கொசுக்களின் மாதிரிகள், சேகரித்த ரத்த மாதிரி கள், அவற்றின் மூலக் கூறுகளை ஆய்வு செய்து கட்டுப்படுத்தும் நடைமுறைகள் அரசுக்கு அனுப்பப்படுகிறது.எத்தனை கொசுக்கள்: மதுரையில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகத்தில் 240 வகையான கொசுக்களின் மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது புதிய கொசுக்கள் கண்டறியப் பட்டு, அவை குறித்த தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன. அவற்றின் இனப்பெருக்கம் குறித்த ஆராய்ச்சிகளும் நடந்துவருகின்றன.

இறப்புப் பட்டியலில் மலேரியாவால் ஏற்பட்ட உயிரிழப்பு தான் அதிகம். 1920 மற்றும் 1930களில் இந்தியாவில் பல லட்சம் மக்களை தாக்கியது. இக் காய்ச்சலுக்கு பத்து லட்சம் மக்கள் இறந்தனர். தேசிய மலேரியா ஒழிப்பு திட்டம் 1958 ல் துவங்கப்பட்டது. தொடர் கண்காணிப்பு, மருத்துவ சிகிச்சையின் மூலம் மலேரியா கட்டுப்படு த்தபட்டது.அதன்பின் அவ்வப்போது மலேரியா காய்ச்சல் வந்தாலும், இறப்புகளின்றி சிகிச்சை அளிக்கப்பட்டது. மலேரியா கட்டுப்படுத்த ப்பட்டாலும் இன்ன மும் அதுகுறித்த ஆய் வுகள் தொடர்ந்து நடக்கின்றன.நன்னீர், தேங்கியுள்ள மழைநீரில் இனப்பெருக்கம் செய்யும். சிலநேரங்களில் ஆற்றின் கரையோரங்களிலும் இனப்பெருக்கம் செய்யும். அனாபிலிஸ் வகை கொசுக்கள் 58 இருந்தாலும் ஆறு வகைகள் மட்டுமே மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பைலேரியா: மருந்து கண்டுபிடிக்கவில்லை. கடற்கரை பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் குயிலெக்ஸ் கொசுக்களால், ‘பைலேரியா’ எனப்படும் யானைக்கால் நோய் உருவாகும். இக்கொசுக்கள் இரவில் கடிக்கும். இவை சாக்கடை, வயல்வெளி சகதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன.
டெங்கு: ‘ஏடிஸ் எஜிப் டே’ வகை கொசுக்களால் டெங்கு வைரஸ் மூலம் காய்ச்சல் பரவுகிறது. மழைக்காலத்தில் ரோட்டில் கிடக்கும் தேங்காய் சிரட்டை, இளநீர் மட்டை, பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில், ரப்பர் கழிவுகளில் தண்ணீர் தேங்கினால், கொசுக்கள் உற்பத்தியாகிறது. வீடுகளில் மூடப்படாத பாத்திரங்கள், திறந்தநிலை மேல்நிலைத் தொட்டிகளின் மூலம் வீடுகளைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகும். பகலில் கடிக்கும்.
சிக்குன் குனியா: ‘ஏடிஸ் எஜிப்டே, ஏடிஸ் ஆல்போபிக்டஸ்’ கொசு க்களால், ‘ப்ளேவி’ வைரஸ் மூலம் சிக்குன்குனியா காய்ச்சல் பரவுகிறது. இதுவும் நன்னீர், மழைநீரில் உற்பத்தியாகும்.

அழிப்பது எப்படி?: கொசுக்களை கட்டுப் படுத்துவது ஒன்றே மிகச்சிறந்த வழி. அவற்றின் இனப்பெருக்கத்தை குறைப்பதற்கு வீடுகளில் தண்ணீர் தேங்கக்கூடாது. ஜன்னல்களில் கொசு வலை, படுக்கையில் கொசுவலை அவசியம். சுற்றுப்புறம் தூய்மையாக இருக்க வேண்டும். உற்பத்தித் தளங்களை கட்டுப்படுத்தினாலே, கொசுக்களால் பரவும் நோய்களை எளிதில் தடுக்கலாம் என்றார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>