அரசை நம்பி பலனில்லாததால் கண்மாயை தூர்வாரிய கிராமத்தினர்

மக்கள் நேரடியாக களத்தில் இறங்கி அரசை எதிர்பார்க்காமல் தங்களது சொந்த செலவில் தூர்வாரும் பணியில்  ஈடுபட்டனர்.

மக்கள் நேரடியாக களத்தில் இறங்கி அரசை எதிர்பார்க்காமல் தங்களது சொந்த செலவில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த சென்னமரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள மிகப்பெரிய கண்மாய் நீண்ட காலமாக தூர்வாரப்படவில்லை. இதனால் மண்மேடாகி கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் பொய்த்துப்போனது. தற்போது முற்றிலும் தண்ணீரின்றி வறண்டு விட்டது. மழைக்காலத்திலும் நீரை சேமிக்க முடியாமல் வீணானதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

ஆனால், அதிகாரிகள் மவுனம் சாதித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக களத்தில் இறங்க தீர்மானித்தனர். அரசை எதிர்பார்க்காமல் தங்களது சொந்த செலவில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி தொண்டு நிறுவனமும் துணை புரிந்தது. கண்மாயில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூர்வாரி ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்ட கிராம மக்கள், தோண்டியெடுத்த மண்ணை டிராக்டர்களில் ஏற்றிச் சென்று கரையில் தட்டி அதையும் பலப்படுத்தினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>