அரசு அலட்சியத்தால் 4பச்சிளம் சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால்உயிரிழந்துள்ளனர்

திமுக சார்பில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னரும் அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அடுத்தடுத்து 4பச்சிளம் சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால்உயிரிழந்துள்ளனர்”

திமுக சார்பில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னரும் அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அடுத்தடுத்து 4பச்சிளம் சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால்உயிரிழந்துள்ளனர்”

திமுக சார்பில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட பின்னரும் அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அடுத்தடுத்து 4பச்சிளம் சிறுவர்கள் டெங்கு காய்ச்சலால்உயிரிழந்துள்ளனர்”

தமிழக எதிர்க்கட்சி தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முகநூல் பதிவு.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை நான்கு சிறுவர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்ற செய்தி மனதை வேதனையில் ஆழ்த்தியது. மேலும் 10 -க்கும் மேற்பட்டவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார்கள். இந்த தகவல் கேள்விப்பட்டு இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் நேரடியாக நோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்திருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக இந்த கொடிய டெங்கு காய்ச்சலால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதை முன்கூட்டியே உணர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் பா.ரங்கநாதன்,மா.சுப்பிரமணியன்,பி.கே.சேகர்பாபு,எம்.கே.மோகன்,நா.கார்த்திக் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்களும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கடந்த2.8.2016 அன்று சட்டமன்றத்தில் கொண்டு வந்தோம். அதற்கு பதிலளித்துப் பேசிய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், “டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் இறக்கும் நிலை இங்கு இல்லை. அப்படி ஒரு நிலை ஏற்படுவதை முதல்வர் ஜெயலலிதாவின் அரசு ஒருபோதும் அனுமதிக்காது. டெங்கு காய்ச்சலால் இறப்பு இல்லை என்ற மாநிலமாக தமிழகத்தை முதல்வர் ஜெயலலிதா பாதுகாத்து வருகிறார்”,என்று கூறி அலட்சியப்படுத்தினார்.

அமைச்சர் டெங்கு காய்ச்சலால் இறக்கும் நிலை வராது என்று சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் நான்கு பேர் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்துள்ளார்கள். இதன் மூலம் அதிமுக அரசின் முகமூடி கிழிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, மனித உயிர்களுக்கு அதிமுக அரசு எப்படி மதிப்புக் கொடுக்கிறது,மக்களின் சுகாதார விஷயத்தில் இந்த அரசு எப்படி துளியும் அக்கறையில்லாமல்  செயல்படுகிறது என்பதை அமைச்சரின் பொறுப்பற்ற பதிலும்,அதைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ள டெங்கு மரணங்களும் வெளிப்படுத்தியுள்ளன. பிரதான எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சட்டமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பி அரசின் கவனத்தை ஈர்த்த பிறகும் கூட,அமைச்சரும், அதிமுக அரசும் சுதாரித்துக் கொள்ளவில்லை. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து டெங்கு காய்ச்சலை தடுக்கவில்லை. டெங்கு,எபோலா போன்ற காய்ச்சலுக்கு பரிசோதனை செய்யப் போதிய எண்ணிக்கையில் ஆய்வு மையங்களை உருவாக்கவும் முன்வரவில்லை. அதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். டெங்கு காய்ச்சலை கண்டறிவதில் ஏற்படும் தாமதம் மரணம் ஏற்படுவதற்கும் அடிப்படைக் காரணமாக அமைந்து விடுகிறது.

ஆகவே அதிமுக அரசு இனியும் வேடிக்கைப் பார்க்காமல் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக எடுக்க வேண்டும். இது போன்ற காய்ச்சல்கள் பற்றி பரிசோதனை செய்வதற்கு உரிய ஆய்வக வசதிகளை போதிய எண்ணிக்கையில் உருவாக்க முன் வர வேண்டும். டெங்கு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, இனி தமிழகத்தில் டெங்கு மரணம் நிகழாமல் தடுக்க வேண்டும் என்று அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>