அரசியலில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள இயலாது. தமிழக முதல்வர்

 

அரசியலில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது ஏற்றுக் கொள்ள இயலாது. தமிழக முதல்வர்

மாயாவதியின் தேர்தல் அரசியலை ‘விபச்சாரத்துடன்’ ஒப்பிட்டு;“கட்சித் தொகுதிகளை மாயாவதி அதிக பணம் கொடுப்பவர்களுக்கு விற்கிறார். யாராவது ரூ.1 கோடி கொடுத்தால் அவருக்கு தொகுதியை வழங்குவார், ஆனால் ஒரு மணி நேரம் கழித்து அதே தொகுதிக்கு வேறொருவர் ரூ.2 கோடி கொடுத்தால் அவருக்குக் கொடுப்பார், பிற்பாடு மாலை வேளையில் யாராவது ரூ.3 கோடி கொடுக்கிறேன் என்றால் அவருக்கு அந்தத் தொகுதியை அளிப்பார்”

 

 

 

 

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சனம் செய்த தயாசங்கர் சிங்கை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒடுக்கப்பட்டவர்களின் நிகரில்லாத் தலைவராக உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்களாலும், மற்றவர்களாலும் மதிக்கப்படுபவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாயாவதி ஆவார். சமீபத்தில் குஜராத்தில் நடந்த நிகழ்வை கண்டித்து இவர் கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறார். அதன் காரணமாகவோ, என்னவோ, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவராக உள்ள தயாசங்கர் சிங் என்பவர் மிகவும் மோசமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க வகையில் மாயாவதியைப் பற்றி விமர்சித்துள்ளார்.

அரசியலில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது என்பது எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. அதுவும் தயாசங்கர் சிங் பயன்படுத்திய வார்த்தைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் இழுக்கை தேடித் தருவதாகவே இது உள்ளது.

அரசியல் வாழ்வில் ஈடுபட்டுள்ள பெண்கள் இது போன்ற கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. எனது அரசியல் வாழ்வில் இது போன்ற துன்பங்களை நான் அனுபவித்துள்ளேன். வார்த்தை சவுக்கடிகளால் தாக்கப்பட்ட மாயாவதியின்பால் எனது இதயம் கசிந்து உருகுகிறது. பெண் அரசியல்வாதிகள் மீது தொடுக்கப்படும் இது போன்ற தாக்குதல்கள் இத்துடனாவது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.

தயாசங்கர் சிங்கின் விமர்சனத்திற்கு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வருத்தம் தெரிவித்திருப்பதும் பாரதிய ஜனதா கட்சி தயாசங்கர் சிங்கை உத்தரப் பிரேதச மாநில கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்துள்ளதும் ஆறுதல் அளிக்கக்கூடியதாக உள்ளது. இந்த நடவடிக்கை போதுமானதல்ல. பெண்ணினத்தை அவமதித்த தயாசங்கர் சிங் பாரதிய ஜனதா கட்சியிலிருந்தே நீக்கப்பட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சித் தலைவரை நான் கேட்டுக்கொள்கிறேன்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்த உ.பி. பாஜக துணைத்தலைவர் தயா சங்கர் சிங்

அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக உ.பி.பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

தயாசங்கர், உ.பி. பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட துணைத்தலைவர் ஆவார். இவர் கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் செய்தியாளர்கள் அதிர்ச்சியடையும் விதமாக மாயாவதியின் தேர்தல் அரசியலை ‘விபச்சாரத்துடன்’ ஒப்பிட்டு பேசியது கடும் சர்ச்சைக்குள்ளானது.

என்று கூறியதோடு கன்சிராமின் கொள்கைகளை விற்றுவிட்டார் மாயாவதி என்று பேசியதுதான் இப்போதைய பதவிப்பறிப்புக்குக் காரணமாகியுள்ளது.

இதனையடுத்து இவரது இந்தப் பேச்சுக்கு பாஜக மன்னிப்பு கேட்டது. அருண் ஜேட்லி மாநிலங்களவையில் இந்த தரக்குறைவான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அரசியலில் வார்த்தைப் பிரயோகங்களில் எச்சரிக்கையும் நாகரிகமும் தேவை என்று பாஜக-வினருக்கு கட்சி மேலிடம் சுற்றறிக்கையும் அனுப்பியது.

மாயாவதியும் தயாசங்கர் சிங்கின் தரக்குறைவான பேச்சிற்கு பதில் அளிக்கும் போது, “நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. நாட்டில் ஒடுக்கப்பட்டோர் அனைவரையும் என் குடும்பத்தினராக கருதுகிறேன். என்னுடைய நம்பிக்கை அறிவுரையாளர் கன்ஷிராமின் அறிவுரைகளை பின்பற்றி நலிவடைந்தோர் கொடுக்கும் அன்பளிப்பை மட்டுமே ஏற்றுக் கொள்கிறேன், தொழிலதிபர்களிடமிருந்து நான் கட்சி நிதி பெறுவதில்லை.

கண்டனம் தெரிவித்த ஜேட்லிக்கும் எதிர்க்கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் என்னை அவர்களது மகளாகவும் சகோதரியாகவும் கருதுகின்றனர். இத்தகையோர் பேச்சுகளை ஊக்குவிக்குஜ் பாஜகவை நாடு ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை” என்றார்.

இந்நிலையில் பாஜக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு தயா சங்கர் சிங்கின் பதவியைப் பறித்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>