அம்மா உணவகங்களில் ரூ.5.69 கோடி முறைகேடு தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி

201608261706001408_dmk-mlas-the-expulsion-procedure-was-not-followed_secvpf

100 நாள் அ.தி.மு.க. ஆட்சியின் வேதனைகள் பற்றியும், தணிக்கை அறிக்கை பற்றியும் நீங்கள் கூறியதற்கு எந்த விளக்கமும் இல்லையே?

100 நாள் அ.தி.மு.க. ஆட்சி பற்றி “கல்கி” இதழ், இந்த வாரம் எழுதிய தலையங் கத்தில், “தமிழகச் சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாள் அன்று மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைத்த விமர்சனங்களைவிட அந்த அறிக்கை இன்னும் காரமானது. தரவுகளின் அடிப்படையிலானது. “அம்மா உணவகங்களில் ரூ.5.69 கோடி முறைகேடு”, “சீர்திருத்தப் பள்ளிகளில் இருந்து காணாமல் போனவர்களில் சுமார் ஐம்பது சதவிகிதம் பேர் கண்டுபிடிக்கப்படவில்லை”, “பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு குறைபாடுகள்”, மாநிலப் பொதுத் துறை நிறுவனங்களில் ஒவ்வொரு நாளும் 40 கோடி ரூபாய் நஷ்டம்”, “யானை வழித்தடங்கள் இன்னும் வகுக்கப்படவில்லை” என்பவை அவற்றில் ஒரு சில. காவலர் குடியிருப்பு தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு கேள்வியை எழுப்பிய போது, “இதைப்பற்றி கேள்வி கேட்க தி.மு.க.வுக்கு அருகதை இல்லை” என்பது முதல்வரின் பதில்.

சட்டசபைத் தேர்தலின்போது அ.தி.மு.க. பல வகையான இலவசங்களை வழங்கு வதாக வாக்குறுதி அளித்த நிலையில், அதற்கான நிதி ஆதாரங்களைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் கண்டித்தது. நீதிமன்றங்களும் கடுமையான கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. “விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர விமர்சனக் குரல்களை ஒடுக்கும் வகையில் மாநில அரசு இயந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது” என்பது அவதூறு வழக்குகள் விஷயத்தில் உச்சநீதி மன்ற அறிவுரை.

“வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைப் பற்றி தெளிவான விளக்கமில்லை” என்றது சென்னை உயர் நீதிமன்றம். இத்தனை கூர்மையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தமிழக முதல்வரிடமிருந்து ஒரு விளக்கமும் இல்லை என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த குறைகளைக் களைவது முக்கியம். அதனைச் செம்மையாகச் செய்யவே நீதித் துறை, தேர்தல் ஆணையம், சி.ஏ.ஜி. போன்ற சுயேச்சை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

அவர்கள் முன் வைக்கும் விமர்சனங்கள் ஆரோக் கியமானவை; ஆக்கபூர்வமானவை; வழிகாட்டு பவை. மத்திய, மாநில அரசுகள் மக்களின் பேராதரவினால் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால், நிர்வாக ரீதியான குறைகள், தவறுகள் தவிர்க்கவியலாதவை. அவற்றை துறைசார்ந்த வல்லுனர்கள் சுட்டிக்காட்டும்போது, திறந்த மனத்தோடு ஏற்றுக் கொள்வதே சரியான அணுகு முறை.

விமர்சனங்களை மௌனத்தால் எதிர்கொள்வது அலட்சியத்துக்கு ஒப்பாகும். ஜனநாயகம் கோருவது அதுவல்ல. தவறுகளை ஏற்றுக் கொள்ளத் துணிவு அவசியம். அதன் தொடர்ச்சியாகவே, குறைகளைக் களைவதற்கான முனைப்பு ஏற்படும்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் முடிந்துள்ள நிலையில், புண்களை மூடி வைப்பது பேராபத்து. கீறி ஆற்றினால் புண் ஆறும்” என்று எழுதியதற்காகவாவது முதலமைச்சர் வாய் திறப்பாரா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>