அமைச்சர் ஜெயக்குமாரை காணவில்லை கல்லூரி மாணவர் புகார்

அமைச்சர் ஜெயக்குமா

சென்னை: ‘மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை காணவில்லை; அவரை கண்டுபிடித்து தர வேண்டும்’ என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திஅமைச்சரை கண்டுபிடித்து தர கல்லூரி மாணவர் புகார்ல், கல்லுாரி மாணவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, ஸ்ரீரங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் நவீன்குமார்; கல்லுாரி மாணவர். இவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனு:சென்னை, ராயபுரம் தொகுதியில் வசித்து வருகிறேன். கடலில் படர்ந்துள்ள கச்சா எண்ணெய் முழுவதுமாக, இன்னும் அகற்றப்படவில்லை. இதனால், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு, சுவாச பிரச்னை மற்றும் வாழ்வாதார பிரச்னை ஏற்பட்டுள்ளது.

கடல் உப்பு நீரில், கச்சா எண்ணெய் கலந்துள்ளதால், ‘கார்பன் மோனாக்சைடு’ கலந்த காற்றை சுவாசிக்க நேரிடுகிறது. மேலும், பல ஆயிரம் மீனவ குடும்பங்களின் வாழ்வதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபற்றியெல்லாம் முறையிடுவதற்காக, என் தொகுதி எம்.எல்.ஏ.,வும், மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமாரை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>