அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை

JAISHANKAR_3139305f

இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், இந்தியா – அமெரிக்கா உறவு குறித்தும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன் ஆலோசனை நடத்தினார்.

இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு புதன்கிழமை நிகழ்ந்துள்ளது.

மேலும் அமெரிக்க பிரநிதிகள் சபையின் சபாநாயகர், பால் ரயான்னுடனும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

இதுகுறித்து பால் ரயான் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய வெளியுறவுச் செயலாளருடான சந்திப்பு இந்தியா – அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உடன்பாடுகள் குறித்தும், பொருளாதாரத்தை அதிகரிப்பது குறித்தும், ஆலோசிக்க நல்ல வாய்ப்பாக அமைந்தது.

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை பகிர்ந்ததன் மூலம் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையான உறவு நன்கு வேரூன்றி உள்ளது”

மேலும் இந்தச் சந்திப்பில் கான்சாஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு தனது வருத்தத்தை பால் ரயான் பதிவுச் செய்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நமது மக்கள் தொடர்ந்து ஒற்றுமையுடம் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கருடன் வரும் வருடங்களில் இணைந்து பணியாற்றுவதில் ஆவலாக உள்ளேன்” என்று கூறினார்.

முன்னதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ். ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமையன்று ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகரிகளுடன் ஆலோசனை நடத்தினர். ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு இந்திய வெளியுறவு செயலாளர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>