அமெரிக்காவில் குடியேற்ற நடைமுறைகளில் கடுமையைக் குறைக்க விதிகளில் சீர்திருத்தம் டொனால்டு டிரம்ப்

201703021432591678_Donald-Trumps-US-Congress-speech-A-fact-check_SECVPF

அமெரிக்க நாடாளுமன்ற்த்தில் முதல்முறையாக பேசிய டிரம்ப் இந்த அதிரடி அறிவிப்பை அறிவத்தார்.

இதுகுறித்து நாடாளுமன்ற்த்தில் பேசிய டிரம்ப் கூறியதாவது: கனடா, அவுஸ்திரேலியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளும் தகுதி அடிப்படையில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை தங்கள் நாடுகளுக்குள் குடியேற அனுமதிக்கின்றன. அந்த முறையை இனி அமெரிக்காவும் கடைப்பிடிக்கும்.

அமெரிக்காவில் தற்போது பயிற்சித் திறன் குறைவான வெளிநாட்டுப் பணியாளர்கள், மிக மலிவான சம்பளத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள். இதனால் உள்ளூர் பணியாளர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்குப் பதில் தகுதியின் அடிப்படியில் மட்டுமே வெளிநாட்டுப் பணியாளர்கள் அமர்த்தினால் ஏராளமான பணம் சேமிக்கப்படுவதோடு, உள்நாட்டுப் பணியாளர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்க வழி ஏற்படும்.

அமெரிக்கப் பணியாளர்களின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல், குடியேற்ற விதிகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

தகுதி அடிப்படையிலான அனுமதி வழங்கப்பட்டால், ஹெச்1பி விசாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என நம்பப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>