அமலாபால் வழியில் விவாகரத்து செய்துவிட்டு நடிக்க வந்த ஹீரோயின்

Hollywood-news-329

அமலாபால் வழியில் விவாகரத்து செய்துவிட்டு நடிக்க வந்த ஹீரோயின் 3/13/2017 2:24:23 PM
இயக்குனர் விஜய்யை மணந்தார் நடிகை அமலாபால். பிறகு இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. அமலாபால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்தார். அதற்கு விஜய் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்னை முற்றியதையதையடுத்து இருவரும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர். சமீபத்தில் கோர்ட் விவாகரத்து வழங்கியது. இதையடுத்து அமலாபால் நடிப்பில் முழுகவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார். அவரைப்போலவே நடிக்க கணவர் தடை விதித்ததால் விவாகரத்து பெற்றிருக்கிறார் இந்தி நடிகை வீனா மாலிக்.

பாகிஸ்தானை சேர்ந்த வீனா மாலிக் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் உருவான சில்க் ஸ்மிதா படமான ‘சில்க் சக்கத் மகா’ படத்திலும் இவர் நடித்திருக்கிறார். 3 வருடங்களுக்கு முன், அஷத் கஹட்டக் என்பவரை மணந்து பாகிஸ்தானில் செட்டிலானர். ஏப்ராம், அமல் என 2 குழந்தைகளுக்கு தாய் ஆனார். இந்நிலையில் வீனா மாலிக்கிற்கு நடிப்பின் மீது மீண்டும் ஆர்வம் எழுந்தது. தனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தபோது அவர் நடிக்க தடை விதித்தார்.

இதையடுத்து அவரைவிட்டு பிரிந்து வாழ்ந்த வீனா, பின்னர் லாகூர் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதற்கு அஷத் பதில் அளிக்கவில்லை. கோர்ட்டுக்கும் வர மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து வீனா மாலிக்கிற்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. விவாகரத்து பெற்றதையடுத்து மீண்டும் நடிக்க வரும் வீனா மாலிக் இந்தி படங்களுக்கு குறி வைத்திருக்கிறார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>