அன்றாட வாழ்வில் கைத்தறி பொருட்களை உபயோகியுங்கள் – மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

அன்றாட வாழ்வில் கைத்தறி பொருட்களை உபயோகியுங்கள் - மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

அன்றாட வாழ்வில் கைத்தறி பொருட்களை உபயோகியுங்கள் – மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: தேசிய கைத்தறி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் கைத்தறி பொருட்களை பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கைத்தறி துறைக்கு ஆதரவு தெரிவித்து அதன் உற்பத்தி பொருட்களை பயன்படுத்த துவங்கினால் பல பேருக்கு வேலை கிடைக்கும் என கூறியுள்ளார்.

கைத்தறி துறைக்கு புதிய உத்வேகம் வழங்க தேசிய கைத்தறி தினமான இன்று நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என கூறியுள்ளார். மேலும் இந்திய கைத்தறி துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல நமது இயல்பு வாழ்கையில் அதிகளவில் கைவினைப் பொருட்களை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய கைத்தறி துறை முற்றிலும் மாறுபட்டது என்றும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காதது என்பதை நாம் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>