அன்புமணி ராமதாசை சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என டெல்லி உயர்நீதிமன்றம்

 மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அன்புமணி ராமதாஸ் மீது சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அன்புமணி ராமதாஸ் மீது சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அன்புமணி ராமதாஸ் மீது சி.பி.ஐ. நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அன்புமணி மீதான விசாரணை சூடுபிடிக்கிறது. 2004 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பதவியை தவறாக பயன்படுத்தி இந்தூர் மற்றும் லக்னோவில் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்தார் என சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அன்புமணி இடைக்கால தடை பெற்றார். அத்துடன் தம் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அன்புமணி மனு நிலையில் இருப்பதால் சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணையை நடத்த முடியாமல் இருப்பதாக கூறினார். விசாரணையை துவக்க ஏதுவாக இடைக்காலத் தடை ரத்து செய்யுமாறு அவர் வாதாடினார்.

இதைகேட்ட நீதிபதி தேஜி அன்புமணி மீதான வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரிக்க தடை இல்லை என உத்தரவிட்டார். இதையடுத்து அன்புமணி மீதான ஊழல் வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விரைவில் துவங்குகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>