அந்தியூர் அருகே வினோத திருவிழா பக்தர்கள் மீது சுடுகஞ்சி தெளித்த பூசாரிகள்

தெளிக்கும் கஞ்சி உடலில் பட்டால் நீண்ட ஆயுளோடு செல்வமும் பெருகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இந்ததிருவிழாவுக்கு, தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

தெளிக்கும் கஞ்சி உடலில் பட்டால் நீண்ட ஆயுளோடு செல்வமும் பெருகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
இந்ததிருவிழாவுக்கு, தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

அந்தியூர்: அந்தியூர் அருகே தம்பிக்கலை அய்யன் கோயில் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் மீது சுடுகஞ்சி தெளிக்கும் வினோத நிகழ்ச்சிநடந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடல் பொதியாமூப்பனூரில் 400 ஆண்டு பழமை வாய்ந்த தம்பிக்கலை அய்யன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஆவணி மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இந்தாண்டு, கடந்த 9ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் மீது சுடுகஞ்சி தெளிக்கும் வினோத வழிபாடு நடைபெற்றது.
பெரிய மண் பானையில் பொங்கல் கஞ்சி வைத்து கொதித்தவுடன், கோயில் பூசாரிகள், தென்னை மரக் குருத்தின் மூலம், கஞ்சியை நனைத்து பக்தர்கள் மீது தெளித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தெளிக்கும் கஞ்சி உடலில் பட்டால் நீண்ட ஆயுளோடு செல்வமும் பெருகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. நாளை வரை தொடர்ந்து மூன்று நாள் நடக்கும் திருவிழாவுக்கு, தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தவண்ணம் உள்ளனர்.

ரத்த வாழைப்பழம்: தம்பிக்கலை அய்யன் கோயிலில் நேற்று இன்னொரு முக்கிய வழிபாடும் நடந்தது. பன்றி, ஆடு, கோழி ஆகியவற்றை சாமிக்கு பலி கொடுத்து, அவைகளின் வயிற்றைக் கிழிந்து, ரத்தத்தில் வாழைப்பழத்தை போட்டு பிசைந்து கொடுக்கும் பரண் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. இப்படி கொடுக்கப்படும் பழத்தை சாப்பிடும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 100க்கும் மேற்பட்ட பெண்கள், பழம் வாங்கி சாப்பிட்டு சாமியை மனமுருக வேண்டினர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>